ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!

what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 22, 2024, 01:16 PM IST
  • பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன?
  • பெண்களை ஈர்க்கும் ஆண்களின் உடல் பாகங்கள்
  • ஆண்களின் உடல் பாகங்களுக்கான அர்த்தம்
ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..! title=

what women find attractive in men : பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி ஆண்களை கவர்கிறதோ, அதனைப்போலவே ஆண்களின் உடல் உறுப்புகளும் பெண்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும். அவை எவை என்பதை தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், ஆண்களின் தோற்றமே பெண்களை கவர்ந்துவிடும். அவை எந்தெந்த உறுப்புகள் என உங்களுக்கு தெரியுமா?

பெண்களை ஈர்க்கும் ஆண்களின் உடல் உறுப்புகள் ; 

1. விரிந்த தோள்கள், மார்பு

ஆண்களிடம் இருக்கும் பரந்து விரிந்த தோள்கள் மற்றும் மார்பை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள். விரிந்த தோள்களும், மார்பும் ஆண்களின் வலிமை மற்றும்ஆண்மையை பிரதிபலிப்பதாக பெண்கள் நம்புகின்றனர். இது பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுப்பதால் இப்படியான உடல் அமைப்பை உடைய ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க | கல்யாணமான ஆண்களுக்கு வரும் ஆசை.. மனைவிகளுக்கு ஷாக் கொடுக்கும் ஆய்வு..!

2. புன்னகை

புன்னகை ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகளை நொடியில் மாற்றிவிடும். கள்ளம் கபடமில்லா புன்னகையை சிந்தும் ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். புன்னகை உண்மையானதாகவும், இதயப்பூர்வமானதாகவும் இருந்தால் அவர்கள் சொக்கிப்போய்விடுவார்கள். ஆண்களிடம் இருக்கும் புன்னகை நட்பு, இயல்பு, நம்பிக்கை, நேர்மறை ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும். இது ஒருவரின் மீது பெண்களுக்கு ஈர்ப்பை கொண்டு வரும். 

3. கண்கள்

ஆண்களின் கண்களும் பெண்களை அதிகம் ஈர்க்கின்றன. ஆண்களின் ஆழமான, உணர்ச்சிகள் நிறைந்த கண்களை பெண்கள் விரும்புகிறார்கள். காந்த தன்மை கொண்ட கண்கள் ஒரு ஆணின் உணர்ச்சிகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவரது நேர்மை மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. கண்களால் ஒரு ஆண் எதுவும் பேசாமல் நிறைய சொல்ல முடியும், பெண்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள்.

4. தாடை

ஆண்களின் வலுவான மற்றும் கூர்மையான தாடை பெண்களையும் ஈர்க்கிறது. ஒரு தெளிவான மற்றும் கூர்மையான தாடை ஒரு பையனின் முகத்தை மேலும் அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்றுகிறது. ஆண்களின் தாடை தனித்துவமான வழியில் ஆளுமையை மேம்படுத்துகிறது. பெண்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள்.

5. பைசெப்ஸ்

ஆண்களின் வலுவான கைகளும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். கைகளின் வலிமை பாதுகாப்பை வழங்குவதை குறிக்கிறது. இதுவே பெண்களை ஈர்க்கும் முக்கிய காரணியாகவும் இருக்கிறது. ஒரு மனிதனின் கைகள் அவனது வாழ்க்கை முறை மற்றும் தன்னைப் பற்றிய அக்கறையின் அளவையும் பிரதிபலிக்கின்றன. எனவே ஆண்களே, பெண்களை ஈர்க்கும் இந்த விஷயங்களை பெருக்கிக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | இந்த 5 சைலண்ட் சிக்னல்கள்... அவர் உங்களை காதலிக்க அதிக வாய்ப்புள்ளது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News