New Year Resolutions : புத்தாண்டில் புதிய விஷயங்களை மேற்கொண்டு, ஒத்துவரதா பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் நினைப்பார்கள். புத்தாண்டில் சபதம் எடுத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் அதை பின்பற்ற வேண்டும் என்பதும் பலரும் எண்ணமாக இருக்கும்.
ஆனால், அவற்றை நிச்சயம் நாம் பின்பற்ற மாட்டோம் என்பது நமக்கே தெரியும். புத்தாண்டு பிறந்த புத்துணர்ச்சியில் முதல் பத்து நாள்கள் வரை எடுத்த சபத்தை பின்பற்றி, பின் அடுத்த ஜனவரி 1 அன்றுதான் நினைத்து பார்போம். இதுதான் பலரிந் நிலையாக இருக்கிறது. அப்படி, மறக்காமல் புத்தாண்டு தோறும் நாம் எடுக்கும் டாப் 5 சபதங்கள் குறித்து இங்கு காண்போம்.
1. ஆரோக்கியமாக உண்ணுதல்
ஆம், இது மிகவும் கடினமான ஒன்று. டீ குடிப்பதை குறைக்க வேண்டும், சைனீஷ் உணவுகளை குறைக்க வேண்டும், வீட்டில் அளவாக சாப்பிட வேண்டும், எண்ணெய் பலகாரங்களை தவிர்த்தல், அதிகமான காய்கறி, புரோத உணவுகளை எடுத்தல், மாமிசம் சாப்பிடுவதை குறைத்தல் ஆகிய சபதங்களில் ஒன்றை நாம் நிச்சயம் எடுத்திருப்போம்.
இவையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது, நன்றாக இருந்தாலும் செயல்படுத்துவது கடினம்தான். நாம் வைராக்கியமாக இருக்கும் நேரங்களில்தான் நம் சபத்தை சோதித்து பார்க்கும் அளவிலான சூழ்நிலை ஏற்படும். அப்போது, சற்று கட்டுக்கோப்பாக இல்லாவிட்டால், நம் சபதம் அதோகதிதான்.
2. அதிக உடற்பயிற்சி
சாப்பிடுவதை போன்று, அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதும் உடனே எடையை குறைக்க வேண்டும் என்பதும் நம் சபத பட்டியலில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். ஜனவரி 1இல் அதிகம் கல்லா கட்டும் இடம் ஜிம்தான் என்று கூறப்படுவதற்கு காரணமும் இதுதான்.
ஆனால், அதையும் முதல் பத்து நாள்களிலேயே மிகவும் சிரமப்பட்டு செய்து, அந்த சிரமத்தை காரணமாக வைத்தே ஜிம்மிற்கு செல்வதை தவிர்ப்பது அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்தாண்டு இல்லையென்றால், அடுத்தாண்டு என மனதை வலுவாக மாற்றிக்கொண்டு, ஜிம்மின் சந்தா தீரும்வரை அவ்வப்போது சென்று வருவது பெரும்பாலனோரின் பழக்கமாக உள்ளது.
3. பணத்தை சேமித்தல்
அடிப்படை தேவைகள், அவசிய செலவுகள் ஆகியவற்றை மட்டும் செய்து சிக்கனமாக இருந்து, பணத்தை சேமிக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக நிச்சயம் இருக்கும். சகோதரி திருமண செலவிற்கு, அப்பாவின் மருத்துவ செலவிற்கு, வருங்கால தேவைக்கு என பல காரணங்களை வைத்து பலரும் சேமிப்பில் ஈடுபட நினைப்பார்கள்.
ஆனால், இவையெல்லாம் தவிர்த்து, கோவா செல்வதற்கு சேமித்துவைப்பது, உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டி, சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு என்றும் நீண்டநாள் சேமிப்பு திட்டங்களை நாம் வடிவமைத்து வைத்திருப்போம். ஆனால், இவை அனைத்தையும் தொடர்ச்சியான கட்டுபாட்டால் சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. வருமானம் ஒருவகை தடையாக இருந்தாலும், அநாவசிய செலவுகள்தான் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
4. டிஜிட்டல் டயர்
சமூக ஊடக பயன்பாட்டை குறைத்தல், செல்போன், மடிக்கணினி, டிவி உள்ளிட்ட ஸ்கிரீன்களை தவிர்ப்பது ஆகியவற்றுக்கு டிஜிட்டல் டயட் என்று வேறு பெயர் உள்ளது. இதை நிச்சயம் கடைபிடித்து, நம் அன்றாட வாழ்வின் ஆனந்தங்களை கொண்டாட வேண்டும் என்றும், குடும்பத்தினருடன் கொஞ்சி குலாவ வேண்டும் என்றும் நாம் பொங்கல் விடுமுறை வரை நினைத்து வைத்திருப்போம்.
ஆனால், அதன்பின் நெட்பிளிக்ஸில் பிடித்த வெப்-சீரிஸ் வந்தால், இரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 6 வரை அனைத்து எபிசோட்களையும் ஒரே அமர்வில் முடித்து தள்ளுவது மட்டுமின்றி டிஜிட்டல் டயட்டையும் ஊதித்தள்ளிவிடுவோம்.
5. அடிச்சது போதும்டா... Quit பண்ணுடா...
இதுதான் என் கடைசி சிகரெட், இதுதான் என் கடைசி குடி என ஒவ்வொரு நாள் இரவில் பலரும் மனப்பாடமாக ஒப்பிப்பதை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.
புத்தாண்டு பிறப்பிலும் அதே கதைதான். புத்தாண்டில் இருந்து புகையை விட்டு புது மனிதனாக பிறப்பு எடுக்க போகிறேன் என வாட்ஸ்-அப்பில் ஸ்டேடஸ் வைப்பதோடு சரி. அந்த ஸ்டேடஸ் மறையும் 24 மணிநேரத்திற்குள்ளேயே பல சிகரெட்டுகளை நாம் ஊதித்தள்ளியிருப்போம் என்பது நிதர்சனமாக உள்ளது. இது எல்லோருக்கும் இல்லையென்றாலும், பெரும்பாலோனருக்கு பொருந்தும்.
மேலும் படிக்க | ஜனவரி மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ