ரிங்டோன் அழைப்புமணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாக மாற்றம்: TRAI

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவு..!

Updated: Nov 2, 2019, 01:57 PM IST
ரிங்டோன் அழைப்புமணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாக மாற்றம்: TRAI

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவு..!

தொலை பேசி பயன்படுத்தும் அனைவரும் முக்கியமான அழைப்புகளை கடைசி நொடியில் கூட தவற விடுகின்றனர். அப்படி தவறவிட்ட பல அழைப்புகளுக்காக நாம் மீண்டும் பல மணிநேரம் காத்திற்குக்க வேண்டி இருக்கும். ஆனால், இப்படி ஆகும் வாய்ப்பு இனி குறைவு; எப்படி என யோசிக்கிறீர்களா...?..  

ஆம்... செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. மொபைல் தொலைபேசி அழைப்புகள் குறைந்தது 30 விநாடிகளுக்கு ஒலிக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெள்ளிக்கிழமை சேவையின் தரத்தில் ஒரு திருத்தத்தில் தெரிவித்துள்ளது. 

செல்போனில் ஒருவர் அழைக்கும்போது 30 வினாடிகளுக்குள் அழைப்புமணி நின்றுவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், தரைவழி தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் தொடர்பான சட்டத்தில் புதிய திருத்தங்களை டிராய் நிறுவனம் மேற்கொண்டது. அந்தத் திருத்தங்களின்படி, செல்போனில் அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும், தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும் நேரம் 60 வினாடிகளாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 15 நாட்களில் அமலுக்கு வர உள்ளது. 

முன்னதாக அழைப்பு ஒலி நேரத்தை 20 முதல் 5 வினாடியாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் 30 வினாடியில் இருந்து 70 வினாடிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் அழைப்பு ஒலி நேரத்தை 30 வினாடியாக டிராய் நிர்ணயித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.