ஆன்லைனில் விற்கப்படும் கன்னி பெண்களின் கன்னித்தன்மை...

ஆன்லைனில் தங்களிலின் கன்னி(Virginity) தன்மையை ஏலம் விடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Last Updated : Dec 16, 2019, 01:45 PM IST
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமெரிக்க மாடல் அழகி, தனது கன்னித்தன்மையினை ஒரு தொழிலதிபருக்கு $3.9 மில்லியனுக்கு (இந்திய மதிப்பில் ரூபாய். 27,66,67,950) விற்றார் என கூறப்படுகிறது.
  • 2017-ஆம் ஆண்டில், 19 வயதான அமெரிக்க மாடலான கிசெல்லே தனது கன்னித்தன்மையை அபுதாபியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு அதே இணையதளத்தில் 3.9 மில்லியன் டாலருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
  • இந்த ஆண்டு, 23 வயதான அஜர்பைஜான் மாடல் ஜப்பானைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியுடன் 3.5 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைனில் விற்கப்படும் கன்னி பெண்களின் கன்னித்தன்மை... title=

ஆன்லைனில் தங்களிலின் கன்னி(Virginity) தன்மையை ஏலம் விடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் நடைபெறும் கன்னி(Virginity) தன்மை ஏலம் பெரும்பாலும் பரவலாக விளம்பரப்படுத்தப்படுகிறது, ஆனால் ஏதேனும் ஒன்றாவது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்பது கடினமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமெரிக்க மாடல் அழகி, தனது கன்னி(Virginity) தன்மை ஒரு தொழிலதிபருக்கு $3.9 மில்லியனுக்கு (இந்திய மதிப்பில் ரூபாய். 27,66,67,950) விற்றார் என கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் கன்னித்தன்மை விற்பனையில் இது ஒரு உலக சாதனையாக இருக்கும்.

ஆதாராமற்ற ஆன்லைன் விற்பனை சந்தைக்கு மத்தியில் தற்போது உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது பயணக் கனவுகளுக்கு நிதி சேர்க்கும் முயற்சியில் ஒரு பணக்கார வாடிக்கையாளருக்கு ஆன்லைனில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ளார்.

19 வயதான காட்யா, சர்ச்சைக்குரிய ஜெர்மனியை தளமாகக் கொண்ட சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸில் (Cinderella Escorts) வலை பக்கத்தில் இந்த வாய்ப்பை அறிவித்துள்ளார். மேலும் அவரது கன்னித்தன்மைக்கு ஆரம்ப விலை €100 000 எனவும் (இந்திய மதிப்பில் ரூபாய் 79,07,500.00) அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவில் அவர் மேலும் குறிப்பிடுகையில்., "நான் உக்ரைனிலிருந்து வந்தவல், ஆனால் இப்போது நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்கு ஆங்கிலம், உக்ரேனிய மற்றும் சில ரஷ்ய வார்த்தைகள் பேச தெரியும். சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸில் எனது கன்னித்தன்மையை விற்க விரும்புவதற்கான காரணம் என்னவென்றால், நான் பயணம் செய்ய விரும்புகிறேன், ஆடம்பரத்தை அனுபவிக்க விரும்புகிறேன், என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

"சட்ட காரணங்களுக்காக" ஜெர்மனியில் வாழ்பவருடனான ஒப்பந்தத்தை காட்யா எதிர்பார்க்கின்றார். கூடுதலாக, அவர் ஒரு ஸ்பான்சரையும் தேடுகிறார், அதாவது அவர் அவருக்கு € 10,000 (இந்திய மதிப்பில் ரூபாய். 79,07,500.00) மாதாந்திர கொடுப்பனவை வழங்குவரையும் அவர் எதிர்பார்க்கின்றார்.

குறைந்தபட்ச ஏலம் எவ்வளவு உயர்ந்ததாக தோன்றினாலும், இது மிகவும் இலாபகரமான கன்னித்தன்மை ஒப்பந்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டில், 19 வயதான அமெரிக்க மாடலான கிசெல்லே தனது கன்னித்தன்மையை அபுதாபியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு அதே இணையதளத்தில் 3.9 மில்லியன் டாலருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு, 23 வயதான அஜர்பைஜான் மாடல் ஜப்பானைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியுடன் 3.5 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெய்லி கிப்சன், 2018-ஆம் ஆண்டில் ஒரு விபச்சார விடுதியில் தனது கற்புத் தொகையை $10 மில்லியன் விற்க முயன்றார், ஆனால் அவருக்கு ஏதேனும் சலுகைகள் கிடைத்ததா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Trending News