கடன் தொல்லையால் அவதியா? மழை நீரால் கிடைக்கும் நம்ப முடியாத நிவாரணம்!!

நீங்களும் கடன் சுமையால் பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்தால், மழை நீர் உங்களுக்கான தீர்வாக ஆமையும்

Written by - ZEE Bureau | Last Updated : Sep 26, 2021, 06:30 PM IST
  • பண நெருக்கடியிலிருந்து விடுபட ஜோதிடத்தில் எளிய பரிகாரம் உள்ளது.
  • மழை நீரை மண் பானையில் நிரப்பி வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், விரைவில் நிதி நிலைமை மேம்படத் தொடங்கும்.
  • திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால், கணபதிக்கு மழை நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.
கடன் தொல்லையால் அவதியா? மழை நீரால் கிடைக்கும் நம்ப முடியாத நிவாரணம்!!

வாழ்க்கையில் மனிதனை பாடாய் படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது கடன் சுமையாகும். கடனுக்கு வட்டி, அந்த வட்டிக்கு வட்டி என கடனை அடைப்பதிலேயே ஒருவரது வாழ்க்கை தீர்ந்து விடுகிறது. 

நீங்களும் கடன் சுமையால் பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருந்தால், மழை நீர் உங்களுக்கான தீர்வாக ஆமையும், ஆம்!! கடனுக்கு மழைக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜோதிடக் கலையின் படி, மழை நீரில் பல உன்னத சக்திகள் இருக்கின்றன. அதில், கடன் சுமையை குறைக்கும் சக்தியும் ஒன்று. 

பல தலைமுறைகளாக இருக்கும் கடனில் இருந்தும் விடுவிக்கும் சக்தி மழை நீருக்கு உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் (Astrology) கூறப்பட்டுள்ளது.

கடனை அடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் 

மழை நீரை சேகரித்து வாளியில் நிரப்பவும். இந்த நீரில் தினமும் பால் கலந்து குளித்து வாருங்கள். குளிக்கும்போது உங்களுக்கு தெரிந்த ஸ்தோத்திரங்களை சொல்லவும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்தால், படிப்படியாக கடன் தொல்லை குறையும். 

ALSO READ: தீராத பண பிரச்சனைக்கு தீர்வை தரும் வாஸ்து சாஸ்திரம்..!!! 

பண நெருக்கடியிலிருந்து விடுபட பரிகாரம்

பண நெருக்கடியிலிருந்து விடுபட, மழை நீரை (Rain Water) மண் பானையில் நிரப்பி வீட்டின் வடக்கு திசையில் வைக்கவும். விரைவில் நிதி நிலைமை மேம்படத் தொடங்கும்.

வியாபாரத்தில் நஷ்டத்தை தவிர்க்க வழிகள்

ஒரு பித்தளை பாத்திரத்தில் மழை நீரை சேகரித்து, ஏகாதசி நாளில் விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதன் மூலம், விரைவில் வியாபாரத்தில் இழப்பு நின்று, லாபம் வரத் தொடங்கும்.

நிதிப் பிரச்சனை மட்டுமல்லாமல், இன்னும் பல விஷயங்களிலும் மழை நீர் நல்ல பலன்களைத் தரும்

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கான தீர்வு

உடல்நலத்தில் (Health) தொடர்ந்து ஏதேனும் பிரச்சனை இருந்தால், சிவபெருமானுக்கு மழை நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் பிறகு, ​மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை சொல்லவும். இவ்வாறு செய்வதால், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம் என நம்பப்படுகின்றது. 

விரைவில் திருமணம் நடக்க 

திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால், கணபதிக்கு மழை நீரால் அபிஷேகம் செய்யுங்கள். விரைவில் திருமண யோகம் கிடைக்கும்.

(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் ஆகும். இவை அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ: Vastu Tips: வீட்டில் இந்த செடிகள் இருந்தால் தரித்திரம் ஏற்படலாம்..!!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News