Mango Price: சந்தைக்கு வந்துள்ள இந்த 'புதிய' மாம்பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை!!

Alphonso Mango Price At Rs 400 Per KG in Market: வெயில் காலங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ருசியான மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு கோடைக் காலம்தான் சிறந்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2024, 11:31 AM IST
  • வெயில் காலம் தொடங்கிவிட்டது.
  • மாம்பழங்களும் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.
  • ஆனால் மாம்பழத்தின் விலையை கேட்டால், நம்மால் அசந்து போகாமல் இருக்க முடியவில்லை.
Mango Price: சந்தைக்கு வந்துள்ள இந்த 'புதிய' மாம்பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை!! title=

Alphonso Mango Price At Rs 400 Per KG in Market: கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. ஒருபக்கம் வெயில் தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது. மறுபுறம் மக்கள் வீடுகளில் குளிரூட்டிகள் முதல் ஏசி வரை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். வெயில் காலத்தில் அதிக பழங்களை உட்கொள்ள வேண்டும். பழங்களில் தான் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெயில் காலங்களில் மாம்பழம் (Mangoes) சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ருசியான மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு கோடைக் காலம்தான் சிறந்தது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் புதிய மாம்பழங்களும் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. ஆனால் மாம்பழத்தின் விலையை கேட்டால், நம்மால் அசந்து போகாமல் இருக்க முடியாது. ஆம்!! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.400 ஆக உள்ளது. எந்தெந்த மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்?

இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் உள்ளன. அவற்றில் தசரா, லாங்க்ரா, சஃபேடா, கேசர், தாசேரி, தோதாபுரி, பாதாமி, மற்றும் ஹபுஸ் ஆகியவை மிகவும் பிரபலமான மாம்பழ வகைகள். ஒவ்வொரு மாம்பழத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு, கோடைக் காலத்தில் கூட அவை சந்தைக்கு ஒரேயடியாக வருவதில்லை. 

மேலும் படிக்க: தொப்பை கொழுப்பு: கொடூரமான பக்க விளைவுகளும் தவிர்க்கும் வழிகளும் இதோ

இப்போது சந்தையில் மாம்பழங்களை வாங்கச் சென்றால், ஆந்திராவின் பிரபலமான சஃபேடா மாம்பழம் எளிதாகக் கிடைக்கும். Blinkit மற்றும் Swiggy Instamart போன்ற தளங்களிலும் இந்த மாம்பழத்தை நீங்கள் எளிதாக வாங்கலாம். அதே சமயம், மாம்பழங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் ஹாபஸ் (அல்போன்சோ) மாம்பழங்களும் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அந்த அளவுக்கு இன்னும் இவற்றின் வரத்து தொடங்கவில்லை. இவை இவற்றின் சுவைக்காக சர்வதேச அளவில் விரும்பப்படுகின்றன. இந்த மாம்பழத்தின் உற்பத்தி மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக அல்போன்சோ மாம்பழங்களுக்கு மகாராஷ்டிரா ரத்னகிரி தான் பேமஸ்.

சில ஆன்லைன் தளங்களில் கேசரி, தோதாபுரி போன்ற மாம்பழங்களையும் காணலாம். ஆனால், தற்போது அனைத்து இடங்களிலும் மாம்பழங்கள் கிடைக்கத் தொடங்கவில்லை. எனினும், நீங்கள் அவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். மறுபுறம், நீங்கள் லாங்க்ரா அல்லது தசரா போன்ற மாம்பழங்களை சாப்பிட விரும்பினால், அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும், ஏனென்றால் அவற்றின் சீசன் வருவதற்கான நேரம் இனி தான் ஆரம்பமாகும்.

மாம்பழத்தின் விலை பற்றி பேசினால், சபேடா மாம்பழம் ஆன்லைனில் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை கிடைக்கிறது. அதேசமயம் அல்போன்ஸ் விலை கிலோ ரூ.400 வரை உள்ளது. ஆனால், மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் போது, ​​சஃபேடா மாம்பழத்தின் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை கிடைக்கும். அதேசமயம் அல்போன்சா மாம்பழங்களின் விலை ஏறக்குறைய அப்படியே தான் இருக்கும்.

மேலும் படிக்க: மதியம் சாப்பிட பிறகு செய்யக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News