Watch video: அனுஷ்காவிற்காக அசத்தலாக பாடிய விராட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

Last Updated : Dec 13, 2017, 09:07 AM IST
Watch video: அனுஷ்காவிற்காக அசத்தலாக பாடிய விராட்!! title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டிவிட்டரில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இந்நிலையில், திருமண விழாவின் போது விராட் கோலி அனுஷ்காவுக்காக அழகான ஹிந்தி ரொமாண்டிக் பாடலை பாடி அசத்தியுள்ளார். அதை அனுஷ்காவும் மிகவும் உருகி அதனை ரசித்து பார்த்து, பாராட்டியுள்ளார்.

 

 

@virat.kohli sings a song for anushka... #virushkaforever #virat #anushkasharma

A post shared by I  Suresh Raina (@one_lyf_one_love_raina) on

 

Trending News