டைனோசராக மாறிய விராட் கோலி... இணையவாசிகளை ரசிக்க வைத்த க்யூட் வீடியோ!!

டைனோசராக நடித்துக் காட்டிய கோலியின் வீடியோ இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது க்யூட் வீடியோ!! 

Updated: May 20, 2020, 03:26 PM IST
டைனோசராக மாறிய விராட் கோலி... இணையவாசிகளை ரசிக்க வைத்த க்யூட் வீடியோ!!

டைனோசராக நடித்துக் காட்டிய கோலியின் வீடியோ இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது க்யூட் வீடியோ!! 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான IPL காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. IPL தொடரில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் ஊரடங்கால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வருகிறது. அந்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது. விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டைனோசர் போல நடந்து வரும் கோலி கடைசியில் அதேபோல ஒலி எழுப்பி செல்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது க்யூட்டான டைனோசர் என பதிவிட்டு வருகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I spotted .... A Dinosaur on the loose 

A post shared by ɐɯɹɐɥS ɐʞɥsnu∀ (@anushkasharma) on

இந்த வீடியோவுக்கு, "நான் கண்டேன் .... தளர்வான ஒரு டைனோசர்," என அனுஷ்கா தலைப்பிட்டார் மற்றும் ரசிகர்கள் தங்கள் தளங்களில் சிரித்தபடி இருந்ததால் இந்த இடுகை வைரலானதுடன், கருத்துக்களும் குவியத்துவங்கியது.