சிகரெட் புகைக்கும் உர்ராங்குட்டான் குரங்கு! Viral Video!

வனவிலங்கு பூங்காவில் இருக்கும் ஓஷான் என பெயரிடப்பட்ட 22 வயதான உர்ராங்குட்டான் குரங்கு ஒன்று சிகரெட் புகைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Last Updated : Mar 9, 2018, 11:36 AM IST
சிகரெட் புகைக்கும் உர்ராங்குட்டான் குரங்கு! Viral Video! title=

வனவிலங்கு பூங்காவில் இருக்கும் ஓஷான் என பெயரிடப்பட்ட 22 வயதான உர்ராங்குட்டான் குரங்கு ஒன்று சிகரெட் புகைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் பான்டுங் மிருகக் காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் விலங்குகளைப் பார்க்க செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த பார்வையாளர் ஒருவர், உர்ராங்குட்டான் இருக்கும் பகுதிக்குச் சென்று தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை, குரங்கு இருக்கும் பகுதிக்கு தூக்கி வீசினார். 

இதை கவனித்துக் கொண்டிருந்த உர்ராங்குட்டான் குரங்கு அதை எடுத்து வாயில் வைத்து ஊதத் தொடங்கிவிட்டது. இதை அங்குள்ளவர்கள் சிலர் வீடியா எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது மிகவும் வருந்தத்தக்க செயல் எனக்கூறியுள்ள பூங்காவின் செய்தி தொடர்பாளர், 'வனவிலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்திருக்கிறோம். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஊழியர்கள் கழிவறைக்கு சென்றிருக்கலாம்’ என தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது இந்தோனேஷிய மிருகக் காட்சி சாலைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே யானை ஒன்று இறந்தது தொடர்பாக எழுந்த பிரச்னையில் இந்த மிருகக்காட்சி சாலை ஒரு வருடம் மூடப்பட்டிருந்தது. 

தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து பல விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளைக் கவனிக்காத அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது என அவர்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.

இதற்கு முன்னர் இதே பூங்காவில் ஸ்கெலிட்டல் சன் வகைக் கரடிகள் உணவுக்காக பார்வையாளர்களிடம் பிச்சை எடுப்பதும், சொந்த மலத்தையே உண்ணுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து மிருகக்காட்சி சாலையின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபற்றி போலீசில் புகார் கூறப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை அடுத்து ஓஷானின் கூண்டுக்குள் சிகரெட் மற்றும் உணவு பொருட்களை வீசுவதற்கு தடைவிதித்துள்ளது. 

உர்ராங்குட்டான் குரங்கு சிகரெட் புகைக்கும் காட்சி வீடியோ இதோ:-

Trending News