திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும்.
திருநீற்றுப் புதனிலிருந்து 46ம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.
கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதன் எனப்படுகிறது. சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருள்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து.
தவக்கால நாள்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம் போன்றவைகளை கடைப்பிடிக்கின்றனர்.