Boxing Day : பாக்ஸிங் டே என்றால் என்ன ? - முழு பின்னணி

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி குறித்து கிரிக்கெட் ஆர்வலர்கள் பெரிதும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதன் பாரம்பரியம், பெயர் காரணம் ஆகியவை குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 26, 2022, 12:09 PM IST
  • இன்று பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கிறது
  • ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
  • 1950இல் இருந்து சர்வதேச அளவில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கிறது.
Boxing Day : பாக்ஸிங் டே என்றால் என்ன ? - முழு பின்னணி title=

கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான டிச. 26ஆம் தேதி (இன்று) அன்று 'பாக்ஸிங் டே' தினம் கொண்டாடப்படுகிறது. இதன் பெயர் பாக்ஸிங் என்று இருந்தாலும், இதற்கும் குத்துச்சண்டை விளையாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

பாக்ஸிங் டே என்றால் என்ன?

இங்கிலாந்து, அயர்லாந்தை தவிர்த்து காமன்வெல்த் நாடுகளில் டிச.26ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிப்பார்கள். ஒருவேளை, டிச. 26 சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் வந்தால், திங்கட்கிழமை அன்று பாக்ஸிங் டே கொண்டாடப்படும். அதாவது, கிறிஸ்துமஸ் தினத்திற்கு வழங்கப்படும் பரிசு பாக்ஸ்களை, அதற்கு அடுத்த நாள் பிரித்து பார்க்கும் நிகழ்வையும் அதுசார்ந்த கொண்டாட்டத்தையுமே பாக்ஸிங் டே ஆக அனுசரிக்கப்படுகிறது.  

இந்த தினத்தில் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்று நேரம் செலவழிப்பார்கள். முன்பெல்லாம், ஏழைகளுக்கு பாக்ஸ்களில் பணக்காரர்கள் பரிசளிப்பார்கள். இந்த தினத்தில் இங்கிலாந்தில் வியாபாரம் அதிகரித்து காணப்படும். அயர்லாந்தில் பாக்ஸிங் டேவின் மற்றொரு ஒரு செயின்ட். ஸ்டீபன்ஸ் டே. 

மேலும் படிக்க | அம்மாடியோ! இத்தனை போட்டிகளா? 2023ல் இந்திய அணி விளையாடும் தொடர்கள்!

முதல் பாக்ஸிங் டே எப்போது நடந்தது? 

கிரிக்கெட்டிலும் இது சிறப்பான தினமாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி மழைக்காலம் முடிந்து நீண்ட இடைவேளைக்கு பின் பாக்ஸிங் டே அன்றுதான் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுவார்கள். அது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில்தான் அந்த டெஸ்ட் போட்டியை விளையாடுவார்கள். 

சர்வதேச அளவில் முதல் முறையாக 1950ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடினர். ஆனால், இது ஒவ்வொரு ஆண்டும் அப்போது நடைபெறவில்லை. 1952இல், தென்னாப்பிரிக்கா தனது பாக்ஸிங் டே போட்டியை விளையாடி, அதில் ஆஸ்திரேலியாவையும் தோற்கடித்தது. அதன்பின், 1968ஆம் ஆண்டுதான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டது. 1980ஆம் ஆண்டில் இருந்து, ஆண்டுதோறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி பாரம்பரியாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை தொடர்ந்து பாக்ஸிங் டே போட்டியை விளையாடி வருகின்றனர். 

பாக்ஸிங் டே பெயர் எப்படி வந்தது?

டிசம்பர் 26ஆம் தேதியை ஏன் பாக்ஸிங் டே என்று அழைக்கிறார்கள் என்ற கேள்விக்கு பல கதைகள் உள்ளன. 1830ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த வாரத்தின் முதல் நாளை குறிப்பதை பாக்ஸிங் டே என சொல்கிறது என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தெரிவிக்கிறது. முன்பு சொன்னதுபோன்று, பாக்ஸில் பரிசை பெற்றதை கொண்டாடுவதில் இருந்து வந்தது என்றுதான் அதிகளவில் நம்பப்படுகிறது. 

இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா பாக்ஸிங் டே போட்டியில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 

மேலும் படிக்க |  அசாத்திய சாதனை படைத்த அஸ்வின்... 34 ஆண்டுக்கு பின் - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News