அசாத்திய சாதனை படைத்த அஸ்வின்... 34 ஆண்டுக்கு பின் - என்ன தெரியுமா?

அஸ்வின் 9ஆவது வீரராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 34 ஆண்டுகால சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 26, 2022, 08:07 AM IST
  • அஸ்வின் படைத்த இந்த சாதனை அரிதினும் அரிதான ஒன்று
  • இந்தியா வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்துள்ளது
  • இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார் அஸ்வின்
அசாத்திய சாதனை படைத்த அஸ்வின்... 34 ஆண்டுக்கு பின் - என்ன தெரியுமா? title=

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம், ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததற்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துள்ளது. 

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை எளிதாக வென்ற இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது பேட்டிங்கின்போது, மிகவும் திணறியது. பந்து ஆடுகளத்தில் பிட்ச் மிகவும் தாழ்வாக வந்துகொண்டிருந்ததாலும், வங்கதேசத்தின் சுழல் வலையில் சிக்கியதாலும் முன்னணி பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3 விக்கெட்டுகள் மட்டும் கையிருப்பில் இருக்க வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான சூழலில், ஷ்ரேயஸ் - அஸ்வின் கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி, நிதானமாகவும், சாமர்த்தியமாகவும் விளையாடி வங்கதேசத்தின் ஆதிக்கத்தை முறியடித்தது. 

மேலும் படிக்க | IND vs SL: முக்கிய வீரரை கழட்டிவிட பிசிசிஐ முடிவு!

இதன்மூலம், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசமாக்கியது. தொடர்ந்து, ஆட்டநாயகனாக அஸ்வினும், தொடர் நாயகனாக புஜாராவும் தேர்வானார்கள். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயக் விருதை வென்றிருந்தார், அஸ்வின். 

அந்த வகையில், அஸ்வின் நேற்று ஓர் உலக சாதனையை படைத்தார். அதாவது, டெஸ்ட் போட்டியில் 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்களை எடுத்து, சேஸிங் செய்து அணியை வெற்றி பெறச்செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், 1988ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வின்ஸ்டன் பெஞ்சமின் 9ஆவது வீரராக களமிறங்கி 40 ரன்களை அடித்து அணியை வெற்றிபெறச் செய்திருந்தார். 

34 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில், அஸ்வின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். இதுபோன்ற சாதனை அரிதிலும் அரிதானது. வின்ஸ்டனுக்கு முன் 1908ஆம் ஆண்டில்  இங்கிலாந்தின் சிட்னி பார்னஸ் 9ஆவது வீரராக களமிறங்கி 38 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | அப்பா ஆகிறாரா சஞ்சு சாம்சன் ; வாரிசு எப்போது? - கிறிஸ்துமஸில் சூசக பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News