ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதன் நடத்தைக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. இதனால் டேவிட் வார்னர் தனது வாழ்நாள் தலைமைத் தடையை மாற்றியமைக்க முறைப்படி விண்ணப்பிக்கலாம். 2018-ல் பந்தை சேதப்படுத்திய ஊழலின் விளைவாக இனி கேப்டனாக இருக்க முடியாது என்ற வாழ்நாள் தடை அவருக்கு விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் வார்னரால் கேப்டன் பதவியை வகிக்க முடியவில்லை. மேலும், இதனை மாற்றி அமைக்க முந்தைய நடத்தை விதிகளின் கீழ் வீரர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் சில மாற்றங்களை செய்து, வீரர்களுக்கு ஆதரவாக சில முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வார்னர் இப்போது தனது தடையை மாற்றியமைக்க விண்ணப்பிக்க முடியும்.
மேலும் படிக்க | இதற்காக தான் ரோஹித் சாஹலை அணியில் எடுக்கவில்லை! உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
"மாற்றங்களின் கீழ், வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் இப்போது நீண்ட கால தடைகளை மாற்றியமைக்க விண்ணப்பிக்கலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "எந்தவொரு விண்ணப்பங்களும் மூன்று நபர் மதிப்பாய்வு குழுவால் பரிசீலிக்கப்படும், வீரர்கள் தங்களின் கோரிக்கைகளை முறைப்படி எடுத்து கூற வேண்டும். அது மதிப்பாய்வு குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களின் தடை நீங்கும். மேலும் அவர்களின் கடந்த கால ஆட்டங்கள் பரிசீலிக்கப்படும். இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர்கள் முன்பு வகித்த பதவிகள் அல்லது பொறுப்புகளை மீண்டும் தொடர ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான வார்னர், தனது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தலைமைத்துவ தடைக்கு பின்னர் ஐபிஎல்லில் கேப்டனாக இருந்து தலைமைப் பாத்திரத்திற்கு திரும்ப ஆர்வமாக உள்ளார். சிட்னி தண்டருக்கு BBL க்கு திரும்பியவுடன் தலைமைத்துவ நிலையில் உதவ ஆர்வமாக இருப்பதாக அவர் சமீபத்தில் பேசினார். 2024 டி 20 உலகக் கோப்பை வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக வார்னர் சுட்டிக்காட்டினார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அடுத்த உலக கோப்பைக்கு அனுபவம் வாய்ந்த வார்னரை ஆஸ்திரேலியா கேப்டனாக அறிவிக்கலாம்.
மேலும் படிக்க | FIFA World Cup 2022 : எலான் மஸ்கின் போட்ட ஸ்வீட்டான ட்வீட்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ