Helmet Safety Tips: 'தலைக்கவசம் உயிர்கவசம்' என்று பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை மதிக்கிறீர்கள் என்றால் ஒருபோதும் சாலைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது ஹெல்மெட் அணிவதை புறக்கணிக்காதீர்கள். சிலர் தனது ஹெல்மெட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்போதே புதிய ஹெல்மெட்டை வாங்கிவிடுகின்றனர், ஆனால் சிலரோ பிரைம்களைக் கடந்தும் நீண்ட காலத்திற்கு ஒரே ஹெல்மெட்டை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நீங்கள் உங்கள் பழைய ஹெல்மெட்டை எப்போது மாற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
1) மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டை மாற்றுவதற்கான மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான அளவுரு என்னவென்றால் உங்கள் ஹெல்மெட்டின் வயதைச் சரிபார்க்க வேண்டும். ஹெல்மெட் பாதுகாப்பு தொழில்நுட்பம் விரைவான வேகத்தில் உருவாகி வருகிறது, எனவே ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கும் இவை பல்வேறு பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்களைக் கொண்டு வரக்கூடும். உங்கள் ஹெல்மெட் அதை விட பழையதாக இருந்தால், ஹெல்மெட் மாடலில் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள புதுமைகளை சரிபாருங்கள், அந்த புதுமைகள் உங்களின் ஹெல்மெட்டில் இல்லை என்றால் நீங்கள் ஹெல்மெட்டை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம், உடனே ஹெல்மெட்டை மாற்றிவிடுங்கள்.
மேலும் படிக்க | மாயமாய் மறைந்த ரூ.2000 நோட்டுகள்!! இனி இவை செல்லாதா?
2) ஹெல்மெட்டை நாம் தினமும் தவறாமல் பயன்படுத்துவதால் பொதுவாக அதில் தேய்மானம், லைனிங் மற்றும் பேடிங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஹெல்மெட்டின் உட்புற பகுதியின் மேற்பூச்சு உரிந்தோ அல்லது சிதைந்து போகவோ வாய்ப்புள்ளது. இப்படி சிதைவுக்குள்ளான ஹெல்மெட்டை நீங்கள் பயன்படுத்தும்போது இது உங்களுக்கு ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, அதிலிருந்து உரிந்த சிறிய பாகங்கள் உங்கள் காதுகளுக்குள் சென்று ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். இதுதவிர அவை உங்கள் மூக்கு பகுதிக்குள் சென்று உங்களுக்கு வாகனம் ஓட்டும்போது கவனசிதறலையும் ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் ஹெல்மெட்டில் இருந்தால் அதனை உடனே மாற்றி புதிய ஹெல்மெட்டை வாங்கி விடுங்கள்.
3) பொதுவாக ஹெல்மெட் உட்புறமாக அதிர்ச்சிகளை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திர அதிர்ச்சியின் பெரும்பகுதி ஹெல்மெட்டிற்குள் வைக்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் ஷெல் (இபிஎஸ்) மூலம் எடுக்கப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே பலமுறை கவனக்குறைவாக ஹெல்மெட்டை கைவிட்டிருந்தாலோ அல்லது ஹெல்மெட் முன்பு விபத்துக்குள்ளானாலோ, ஹெல்மெட்டின் பாதுகாப்பு அம்சங்கள் சிதைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம். அதனால் உங்கள் ஹெல்மெட்டின் வெளிப்புறத்தில் ஏதேனும் தேய்மானம் மற்றும் கீறல்கள் போன்றவை தென்பட்டால் இது உங்கள் ஹெல்மெட்டை மாற்ற வேண்டிய நேரம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டு ஹெல்மெட்டை மாற்றிவிடுங்கள்.
4) இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுவாக வெளியில் பயணம் செய்யும்போது வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. அதிலும் குறிப்பாக ஹெல்மெட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களுக்கு வியர்வைகள் சற்று அதிகமாகவே தான் இருக்கின்றது. பொதுவாக உங்கள் வியர்வையானது ஹெல்மெட்டில் உள்ள மென்மையான ஹைபோஅலர்கெனி லைனிங் மற்றும் பேடிங்கால் உறிஞ்சப்படுகிறது. நீங்கள் உங்கள் ஹெல்மெட்டை நல்ல முறையில் பராமரிப்பதன் மூலமும், அதிகபட்சம் ஐந்து முதல்ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதனை சுத்தமாக துவைப்பதன் மூலமும், ஹெல்மெட்டில் உள்ள துர்நாற்றத்தைக் குறைக்கலாம். இப்போதெல்லாம் ஹெல்மெட்டில் நாம் பயன்படுத்திய பின்னர் அதில் வியர்வை துர்நாற்றம் வராத வகையில் ஹெல்மெட் டியோடரைசர்களும் உள்ளன, அதனை நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும் நீங்கள் என்னதான் செய்தாலும் ஹெல்மெட்டில் உள்ள துர்நாற்றம் போகவில்லையென்றால் நீங்கள் புதிய ஹெல்மெட்டை வாங்க வேண்டியது சிறந்தது.
5) நீங்கள் அணிந்திருக்கக்கூடிய ஹெல்மெட் சாலையில் வாகனம் ஓட்டிச்செல்லும்போது அந்த காற்றில் ஹெல்மெட் வேகமாக ஆடினால் நல்லதல்ல. இப்பொழுதெல்லாம் வரக்கூடிய ஹெல்மெட்டுகள், ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்புடன் வருவதால், இது எவ்வளவு காற்று அடித்தாலும் அசையாமல் அப்படியே இருக்கும். இதனை நீங்கள் அணிந்துகொள்வதால் உங்கள் கழுத்து தசைகளில் ஏற்படும் அழுத்தம் குறைவதுடன், ஏதேனும் விபத்து ஏற்படும்போது அந்த வேகத்தில் ஹெல்மெட் பறந்து போவது தடுக்கப்படுகிறது. எனவே இந்த அம்சம் நிறைந்த ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவது உங்களுக்கு பாதுகாப்பை தருகிறது.
மேலும் படிக்க | மகள்களுடன் சேர தனது பாலினத்தை மாற்றிய தந்தை - கண்டனம் தெரிவிக்கும் LGBTIQ அமைப்பினர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ