ZIMA -பள்ளியில் Exclusive Journalism Programme தொடக்கம்!

ZIMA -பள்ளியில் 9 மாத கால சான்றிதழ் வழங்கும் புதிய Exclusive Journalism Programme கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது! 

Last Updated : Jun 9, 2018, 10:37 AM IST
ZIMA -பள்ளியில் Exclusive Journalism Programme தொடக்கம்! title=

நொய்டா வளாகத்தில்அமைந்துள்ள ZIMA - பள்ளியில் 9 மாத மாத சான்றிதழ் வழங்கும் புதிய Exclusive Journalism Programme  கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வி திட்டத்தின்  மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை எளிதில் வளர்த்து கொள்ள முடியும். 

இந்த 9 மாத கால பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள, ஜீ மீடியா மற்றும் டி.என்.ஏ உடன் பல்வேறு தொழில்நுட்பங்களில் வேலை செய்ய வாய்ப்புகளை பெறுவார்கள்.

இந்த திட்டத்தில், மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி, தொழில்நுட்ப பயிற்சி, செயற்கை நுண்ணறிவு, லைவ் வீடியோ முறை, கேமிரா செயல்பாடு, போன்றவற்றை மாணவர்க்களுக்கு 9 மாத காலம் கற்று கொடுக்கப்படும்.

இது குறித்து சி.எச்.ஆர்.எல்., தலைமை மனித வள அதிகாரி, சுசில் ஜோஷி கூறுகையில்,....! "நுழைவு தரநிலைகளைப் பற்றி நாம் தேர்வு செய்துள்ளோம்.  இந்த புதிய கல்வி  திட்டதின் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகள் வளர்த்து கொள்ள முடியும். 

இதன் மூலம், ஜீ மீடியா & டிஎன்ஏ போன்ற மிகப்பெரிய தொழில்நுட்பங்களில் வேலை செய்ய வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவார்கள். இதனால் மாணவர்களின் எதிர்கால கனவு நிறைவு பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த புதிய கல்வி திட்டமானது நொய்டாவில் ZIMA - பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டிருந்த போதிலும், மும்பை ZIMA - பள்ளியிலும் இதேபோன்ற புதிய கல்வி திட்டமானது தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கருத்து கூறியுள்ளார். 

இந்த புதிய கல்வி பயிற்சி திட்டத்தில் சேர ஆர்வம் கொண்டவர்கள்,,,,,!yogesh.lad@zeemedia.esselgroup.com / diana.chettiar@dnaindia.net at Mumbai; ….. for Noida, …. for Jaipur. தொடர்பு கொள்ளலாம்....என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Trending News