வெளியானது சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில்!!

சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 2, 2019, 05:55 PM IST
வெளியானது சந்தானத்தின் புதிய படத்தின் டைட்டில்!! title=

சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் A1 என்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1 என்று வைக்கப்பட்டுள்ளது. ஜான்சன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவில் லெட் ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவிருப்பதாகவும், வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Trending News