நிர்கதியாய் நிற்கிறேன்! நடிகர் சங்கம் உதவுமா? வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி வேண்டுகோள்!

வாழ்வாதரமாக இருந்த நடிகர் ஹரிவைரவன் உயிரிழந்த நிலையில், உடைந்த ஓட்டு வீட்டில் வாழ்வாதரத்திற்கு வழியின்றி நிற்கதியாய் நிற்கும் அவரது குடும்பத்தினர் நடிகர் சங்கத்தினருக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 3, 2022, 06:35 PM IST
  • ஹரிவைரவன் நேற்று காலமானார்
  • வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்
  • அவரது மனைவி நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை
நிர்கதியாய் நிற்கிறேன்! நடிகர் சங்கம் உதவுமா? வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி வேண்டுகோள்! title=

மதுரையை சேர்ந்த நடிகரான ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு-1 மற்றும் வெண்ணிலா கபடி குழு -2 , குள்ளநரிக்கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் விஷ்ணுவிஷாலின் நண்பராக கபடி குழுவில் நடித்த நடிகரான ஹரிவைரவனின் நடிப்பு அந்த திரைப்படத்தில் முக்கிய இடம் பிடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கிட்னியில் பிரச்னை இருப்பதாக கூறப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார் ஹரி .

நடிகர் ஹரிவைரவனின் உடலானது மதுரை கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரிவைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிய நிலையில் 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருக்கிறார். 

நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்திவந்த ஹரிவைரவனின் மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்துவரும் நிலையில் வாழ்வாதரமாக இருந்துவந்த ஹரி வைரவனின் மறைவால் செய்வதறியாது நிற்கிறார். 

தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரிவைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் வாழ்வாதரத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, நடிகர் ஹரிவைரவன் காலமான நிலையில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குனர் பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்ட நடிகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பேரதிர்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன்! விடுதலை படப்பிடிப்பு நிறுத்தம்

மேலும் படிக்க | டூப் என்ற பேச்சுக்கே இடமில்லை... துணிவு படத்தில் 100 சதவீதம் அஜித்தான் - வதந்திக்கு முற்றுப்புள்ளி

மேலும் படிக்க | மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News