பேரதிர்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன்! விடுதலை படப்பிடிப்பு நிறுத்தம்

விடுதலை படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த சண்டைக்காட்சி பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2022, 06:19 PM IST
பேரதிர்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன்! விடுதலை படப்பிடிப்பு நிறுத்தம் title=

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இதுவரை காமெடி நடிகராக இருந்த சூரி, கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விடுதலை படத்தின் படப்பிடிப்பு, சென்னை புறநகர் பகுதிகளில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் விடுதலை படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதில் இயக்குநர் வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது சண்டைகாட்சி பயிற்சியாளராக செயல்பட்ட சுரேஷ் என்பவர், ரோப் கயிற்றில் இருக்கும்போது அது திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் சுரேஷூக்கு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அது பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் இந்த மறைவு, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், விடுதலை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பின்போதும் கிரேன் விழுந்ததில் தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழந்தனர். அப்போது அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பது கோலிவுட் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி

மேலும் படிக்க | விஜய்க்கு வில்லனாக அழைத்த லோகேஷ் கனகராஜ்... மறுத்துவிட்ட கார்த்திக்?

மேலும் படிக்க | தளபதி 67 பூஜையிலிருந்து ஷூட்டிங்வரை - புதிய அப்டேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News