’ஷாட் ஓகே நெக்ஸ்ட்’ விஷாலை நோஸ்கட் செய்த பிரகாஷ் ராஜ்

பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவுக்கு பதிலடி காரசாரமாக கமெண்ட் அடித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2022, 02:24 PM IST
’ஷாட் ஓகே நெக்ஸ்ட்’ விஷாலை நோஸ்கட் செய்த பிரகாஷ் ராஜ் title=

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், லத்தி, துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். லத்தி படம் சூட்டிங் முடிந்து ரிலீஸூக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் மார்க் ஆண்டனி படத்தில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்குகிறார். கடந்த சில படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில் இனி வரும் படங்கள் ஹிட் அடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார் விஷால். இதனையொட்டி ஆன்மீக பயணம் மேற்கொண்ட அவர், அண்மையில் காசிக்கு சென்றார்.

மேலும் படிக்க | வாரிசு - இன்று மாலை வெளியாகிறது ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ

அங்கு சாமி தரிசனம் முடித்த கையோடு டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டார். அதில், அண்மையில் தான் காசிக்கு சென்றபோது சிறப்பான தரிசனம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். காசியை இந்தளவுக்கு அழகாக மாற்றியத்தற்கு நன்றி எனத் தெரிவித்து, பிரதமர் மோடியையும் டேக் செய்திருந்தார். விஷாலின் இந்தப் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். அதில் தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன் என கூறியிருந்தார்.

இந்த உரையாடலை தான் நடிகர் பிரகாஷ் ராஜ் காரசாரமாக கிண்டலடித்துள்ளார். நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவை டேக் செய்த அவர், “shot ok... next" என கமெண்ட் அடித்துள்ளார். அதாவது இருவரும் சிறப்பாக நடித்துள்ளதாக மறைமுகமாக கிண்டலடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். அரசியல் ரீதியாக பாஜக-வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக பிரகாஷ் ராஜ் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சமந்தாவின் அர்ப்பணிப்பு - வியந்துபோன ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News