நடிகை கஸ்தூரிக்கு கிடைத்த பதவி! ட்விட்டர் வாழ்த்து!

நடிகை கஸ்தூரி தற்போது சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மகளிரணி அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்!

Updated: Jun 12, 2018, 04:15 PM IST
நடிகை கஸ்தூரிக்கு கிடைத்த பதவி! ட்விட்டர் வாழ்த்து!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல முன்னனி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர், இதையடுத்து நடிப்புக்கு சிறிது இடைவெளிவிட்டு வந்த கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். 

அதோடு, தமிழக அரசியல் குறித்தும், நடிகர்கள் குறித்தும் அவ்வவ்போது கருத்து தெரிவித்து வருகிறார். முன்னதாக, ஸ்ரீதேவியுடன் பாலிவுட் நடிகை சன்னி லியோனை இணைத்து பேசி சர்சையை கிளப்பினார். இதையடுத்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை போராட்டம் வெற்றியடைய வாழ்த்து கூறினார். 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தற்போது சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மகளிரணி அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளபக்கங்களில் அவர் தற்போது பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.