சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: May 6, 2019, 10:48 PM IST
சிவகார்த்திகேயனின் SK16 திரைப்படத்தில் இணைந்த பிரபலம்...

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். 

இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இமான் இசையமைப்பாளரும், துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இம்மானுவேல் கதாநாயகியாகவும் படத்தில் இணைந்திருப்பதாக இன்று அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17 நாள் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது கைவசம் இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ஆர் ரவிகுமார் இயக்கத்தில் SK14 திரைப்படம், பி எஸ் மித்ரன் இயக்கத்தில் Hero என்னும் திரைப்படம், இயக்கநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் SK17 திரைப்படம் என வரிசையாக காத்திருக்கின்றது.