மலை உச்சியில் மாஸ் போஸில் தல அஜித், வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் பைக் ரைடிங் சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகி வந்த நிலையில் தற்போது மற்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2021, 10:14 AM IST
மலை உச்சியில் மாஸ் போஸில் தல அஜித், வைரலாகும் புகைப்படம் title=

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

வரும் பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு வலிமை (Valimai) திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் (Ajith Kumar) சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன், ஏற்கனவே இந்த பயணத்தை மேற்கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணையும் தல அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வாகா எல்லையில் கையில் தேசியக்கொடி ஏந்தியப்படி நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதையத்து அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பாலைவனத்தில் அமர்ந்து அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன், ஏற்கனவே இந்த பயணத்தை மேற்கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணையும் தல அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வாகா எல்லையில் கையில் தேசியக்கொடி ஏந்தியப்படி நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதையத்து அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பாலைவனத்தில் அமர்ந்து அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் பைக் ரைடிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தற்போது அஜித் ஒரு மலை முகட்டின் மீது பின்னணியில் கடல் இருக்கும் பகுதி ஒன்றில் நிற்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News