ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் சூட்டப்பட்டது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் Thalaivar168 படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது!

Updated: Feb 24, 2020, 06:42 PM IST
ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் சூட்டப்பட்டது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் Thalaivar168 படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது!

இயக்குநர் சிறுத்தை சிவாவின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ள இத்திரைப்படத்தின் பெயர் அண்ணாத்த என சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்காக நடிகை நயன்தாரா ஐதாராபாத் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வைரலானது. 

நயன்தாரா இறுதியாக ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் பிரவேசம் செயத் ரஜினிகாந்தின் தர்பாரில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்ததில் உருவாகி வரும் ரஜினிகாந்த் உடனான அவரது அடுத்த படத்தில் ரசிகர்களின் கண்கள் திரும்பியுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.