ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?

AP Assembly Election Results 2024 Rajinikanth : ஆந்திராவில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திர பாபு நாயுடு புதிய முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம், நடிகர் ரஜினிகாந்த்தான் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். அது எப்படி?   

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2024, 12:11 PM IST
  • ஆந்திராவில் வென்ற சந்திரபாபு நாயுடு
  • இதற்கு ரஜினி காரணமா?
  • மக்கள் பேசிக்கொள்வது என்ன?
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?  title=

AP Assembly Election Results 2024 Rajinikanth : கடந்த 2 மாதங்களாக இந்தியா முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் முதற்கட்டமாக தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதில் ஆந்திர பிரதேஷ், அருணாச்சல பிரதேஷ், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இதில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம்:

ஆந்திர மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனா கட்சியுடனும், பாஜகவுடனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஜகன் மோகன் ரெட்டி தலமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அணி, இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியானது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால், முதலமைச்சராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழந்தார். 

சந்திரபாபு நாயுடு, வரும் ஜூன் 9ஆம் ஆண்டு புதிய முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து, இவரது வெற்றிய, தேசிய ஜனநாயக கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் இந்த வெற்றிக்கு, ரஜினிகாந்த்தான் காரணம் என பலர் பேசி வருகின்றனர்.

சந்திரபாபுவை புகழந்த ரஜினி:

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார். அவருகு முக்கியமான வேலைகள் இருந்த போதும் அதை தவிர்த்து விட்டு இந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவை ரஜினி புகழ்ந்து பேசினார். 

மேலும் படிக்க | AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..

தனக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் 30 ஆண்டு கால நட்பு இருப்பதாக பேசிய அவர், “அவர் ஒரு அரசியல் தீர்க்க தரிசி” என சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்தார். மேலும், தான் எப்போது ஹைதராபாத் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதாகவும் அவர் பேச்சில் பல விஷயங்கள் அடங்கியிருக்கும் என்றும் கூறினார். அது மட்டுமன்றி, அவர் எப்போதும் சேவை செய்வது பற்றியே சிந்திப்பதாக கூறினார். 

கண்டனங்கள்..

ரஜினிகாந்தின் பேச்சுக்கு, ஆந்திராவில் பல்வேறு தரப்பினர்கள் இடையே இருந்து கண்டனங்கள் எழுந்தன. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ரஜினி இப்படி பேசியது, அங்கு அரசியல் மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நடிகையுமான ரோஜா, ரஜினிகாந்தின் புகழாரத்திற்கு நேரடியாக விமர்சனங்களை தெரிவித்தார். இதையடுத்து, ரஜினி சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவாக அவரை புகழ்ந்து பேசியது அங்கு ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரசிகர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | Chandrababu Naidu : ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு! அறிந்ததும் அறியாததும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News