‘அயலான்’ first look: தனது புது நண்பரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்தி..!

Updated: Feb 18, 2020, 12:57 PM IST
‘அயலான்’ first look: தனது புது நண்பரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்தி..!

சிவகார்த்திகேயன் தனது புதிய நண்பரான அயலானை அறிமுகப்படுத்தியுள்ளார்!!

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘அயலான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வேற்றுக்கிரகவாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி உள்ளனர். இன்று காலை சிவகார்த்திகேயனின்  ‘டாக்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

அயலான் சீரியஸான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக அயலான் இருக்கும் என எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஏலியன் கையிலும், சிவகார்த்திகேயன் கையிலும் லாலி பப் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது, இந்த படமும் இன்று நேற்று நாளை படத்தை போல சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த காமெடி படம் என்று எதிர்பார்க்கபடுகிறது.