பாகுபலி-2 டிரெய்லர் ரீலீஸ் -பார்க்க வீடியோ

Last Updated : Mar 16, 2017, 11:28 AM IST
பாகுபலி-2 டிரெய்லர் ரீலீஸ் -பார்க்க வீடியோ title=

ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் இன்று மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகிறது.

'பாகுபலி 2' டிரைலர் 2 நிமிடம் 20 விநாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரெய்லரில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். 

இந்த டிரெய்லரை இன்று காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு இணையதளங்களில் இந்த டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது. தெலுங்கில்தான் இப்படத்தின் முதல் டிரைலர் வெளியிடப்படுகிறது 

பாகுபலி முதல் பாகம் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Trending News