விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 (BIGBOSS SEASON 5) நிகழ்ச்சி, 60 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியாளர்களாக கலந்து கொண்ட நாடியா சாங், சுருதி, மதுமிதா மற்றும் நமீதா மாரிமுத்து ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், மற்றப் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தங்களின் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். வயதான போட்டியாளராக கருத்தப்பட்ட அண்ணாச்சி, எப்படியும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியேற்றப்பட்டுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ALSO READ | கோவிட் தொற்றிலிருந்து மீண்டபின் கமல்ஹாசன் நெகிழ்ச்சி ட்வீட்
ஆனால், அவர் போட்டியை புரிந்து கொண்டு விளையாடிய விதம், அனைவரையும் ஈர்த்ததால் இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். டஃப் போட்டியாளர்களுள் ஒருவராக மாறியிருக்கும் அண்ணாச்சி, அடுத்தடுத்த டாஸ்க்குகளில் எப்படி விளையாடப்போகிறார்? என்பதைப் பொறுத்து அவரின் இறுதிப்போட்டி கனவு நனவாகும். இதேநிலையில் நிரூப்பும் இருக்கிறார். ஆரம்பத்தில் மிகவும் சவாலான போட்டியாளராக இருந்த அவர், பிரியங்கா, அபிஷேக்குடன் ஏற்பட்ட நட்புக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தை விளையாடவில்லை.
ALSO READ | சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: மாற்று திறனாளிகளை கவர்ந்த 'மாயோன்' பட டீசர்
யாருடன் எப்படி பழகுவது? என்பது இப்போதைக்கு அவருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கடந்த வாரம் எலிமினேஷன் இறுதிவரைக்கும் சென்று வந்துவிட்டார். குழப்பமான சூழலில் அவர் இருப்பதால், இறுதிப்போட்டிக்கு செல்வது அடுத்தடுத்த நாட்களில் அவர் விளையாடும் விதத்தை பொறுத்து இருக்கப்போகிறது. பாவனி, அபினய் ஆகியோர் டாஸ்குகளில் பங்கேற்றாலும், தங்களுக்கென ஒரு இடத்தை வீட்டிற்குள் நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான இறுதிப்போட்டி வாய்ப்பு என்பது குறைவாகவே பார்க்கப்படுகிறது. சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் இப்போது தான் களத்தில் இறங்கியிருக்கின்றனர். அவர்கள் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பதை பொறுத்துதான், அவர்களுக்கான வாய்ப்பு பற்றி கூற முடியும்.
இவர்களை தவிர்த்துப் பார்த்தால், முதலில் அப்பாவியாக பார்க்கப்பட்ட தாமரை, சிறப்பாக விளையாடுவதுடன், தனக்கான இடத்தையும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். ராஜூ, சிபி, வருணும் அருமையாக விளையாடுகின்றனர். இவர்களுடன் பிரியங்கா, அக்ஷராவுக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல மெல்லிய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. வீட்டிற்குள் அமளிதுமளி செய்யும் அபிஷேக்குக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அவர் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை. முடிவாக, யூகத்தின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் ராஜூ, சிபி, தாமரை, பிரியங்கா, வருண் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர். இன்னும் 40 நாட்கள் இருப்பதால், இந்த வரிசை மாறவும் வாய்ப்பு உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR