பிக் பாஸ் தமிழ் 4, 28 ஆம் நாள்: இமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்களை கடுப்பேற்றிய சுசித்ரா..!

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைகிறார். 

Last Updated : Nov 2, 2020, 09:55 AM IST
    1. பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைகிறார்.
    2. அர்ச்சனாவை கொஞ்சம் வெளுத்து வாங்கி அதிகம் பேசாதே என்கிற எமோஜியை கொடுக்கிறார்
    3. இந்த வாரம் ரசிகர்கள் முன்பே கணித்தது போல பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் 4, 28 ஆம் நாள்: இமோஜி கொடுத்து ஹவுஸ்மேட்களை கடுப்பேற்றிய சுசித்ரா..!

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைகிறார். சுசித்ரா இடம்பெறும் அத்தியாயம் நேற்று (நவம்பர் 1) முதல் ஒளிபரப்பானது. இவர் உள்ளே வருவது பற்றிய புரோமோ ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது போட்டியாளர்கள் யார் யார் எப்படி என அனைவருக்கும் ஒரு இமோஜி கொடுத்துள்ளார். 

சுரேஷுக்கு தலையில் கட்டு போட்டிருக்கும் இமோஜியை கொடுக்கிறார். ரியோ என்ன தேடலில் இருக்கிறார் என்பது தனக்கு தெரிய வில்லை என்பதற்கு எடுத்துக்காட்டும் வகையில் இமோஜியை கொடுத்துள்ளார். அர்ச்சனாவை கொஞ்சம் வெளுத்து வாங்கி அதிகம் பேசாதே என்கிற எமோஜியை கொடுக்கிறார்.

 

ALSO READ | Bigg Boss Tamil 4: பிக்பாஸ் வீட்டுக்குள் பாடகி சுசித்ரா என்ட்ரி! அடுத்தது என்ன?

சனமிற்கு எமோஜி கொடுத்து பாலாவுக்கும் உங்க மேல பாசம் இருக்கு என ஜாலியாக அவர் கொளுத்தி போட்டார். அதேபோல எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர். அவர் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக பேசிய சுச்சி, அந்த போட்டியாளர் அனிதா தான் என்பதை அனைவருக்கும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த வாரம் ரசிகர்கள் முன்பே கணித்தது போல பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் (Bigg Boss Tamilவீட்டுக்குள் பாடியது தவிர அவர் பெரிதாக எதுவும் கண்டெண்ட் கொடுக்கவில்லை என்பது தான் அவரது வெளியேற்றத்திற்கான காரணமாக இருக்கலாம். ஆஜீத், வேல்முருகன் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் சரியாக கணித்து இருந்தனர். அதன்படி வேல்முருகன் வெளியேற்றத்தை கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்.

ALSO READ | Bigg Boss Tamil 4, Written Update: நீ எனக்கு மகனாக வேண்டும்; பாலஜியிடம் கண்கலங்கிய அர்ச்சனா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News