வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழ் 4 இல் நுழையும் இந்த பிரபல VJ தொகுப்பாளர்?

பிக் பாஸ் தமிழ் 4 அக்டோபர் 4 அன்று திரையிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில், இந்த நிகழ்ச்சி பல்வேறு துறைகளில் இருந்து 16 புதிய போட்டியாளர்களுடன் எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக அமைத்துள்ளது.

Last Updated : Oct 8, 2020, 03:52 PM IST
    1. பிக் பாஸ் தமிழ் 4 அக்டோபர் 4 அன்று திரையிடப்பட்டது.
    2. முன்னதாக, 16 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைவார் என்று செய்திகள் வந்தன.
    3. இந்த சீசனில் அர்ச்சனா முதல் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக இருக்க வாய்ப்புள்ளது.
வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழ் 4 இல் நுழையும் இந்த பிரபல VJ தொகுப்பாளர்?

பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss Tamil 4அக்டோபர் 4 அன்று திரையிடப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில், இந்த நிகழ்ச்சி பல்வேறு துறைகளில் இருந்து 16 புதிய போட்டியாளர்களுடன் எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக அமைத்துள்ளது. தகவல்களின்படி, VJ அர்ச்சனா சந்தொசே (Archana Chandhoke), வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் தமிழில் நுழைய உள்ளார்.

முன்னதாக, 16 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைவார் என்று செய்திகள் வந்தன. ஆனால் மற்றொரு போட்டி சேனலுடனான முந்தைய உறுதிப்பாட்டின் காரணமாக, பிரீமியரின் போது அவர்களால் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது இரண்டு வெவ்வேறு சேனல்களில் பணிபுரியும் சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன, மேலும் மற்ற BB போட்டியாளர்களுடன் விளையாடுவதற்கு அவர் தயாராக உள்ளார்.

 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4 க்குள் பங்கேறப்பது ஏன்? அனிதா சம்பத் வெளியிட்ட காரணம்

இந்த சீசனில் அர்ச்சனா முதல் வைல்ட் கார்டு  என்ட்ரி ஆக இருக்க வாய்ப்புள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு நுழைந்த நடிகை மற்றும் சூப்பர்மாடல் மீரா மிதுன்.

அர்ச்சனா Sa Re Ga Ma Pa சீனியர்ஸ் (சீசன் 1 மற்றும் 2), Sa Re Ga Ma Pa Li’l சாம்ப்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், அதிர்ஷ்ட லட்சுமி மற்றும் காமெடி டைம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சூப்பர் மாம் (சீசன் 1 மற்றும் 2) நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவரது மகள் ஜாரா வினீத்தும் தொகுத்து வழங்கினர்.

தற்போது, BB வீட்டிற்குள் பூட்டப்பட்ட 16 போட்டியாளர்கள்- ரியோ ராஜ், ஆரி அர்ஜுனா, சம்யுக்தா கார்த்திக், அரந்தாங்கி நிஷா, கேப்ரில்லா சார்ல்டன், வேல்முருகன், ஜித்தன் ரமேஷ், அஜீத் கலிக், ரேகா ஹாரிஸ், சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், சிவானி நாராயணம் மற்றும் ரம்யா பாண்டியன்.

அர்ச்சனாவின் சாத்தியமான நுழைவு பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஐ இன்னும் சுவாரஸ்யமாக்கும்.

 

ALSO READ | Bigg Boss Tamil 4, day 1 highlights: இந்த சீசனின் முதல் கேப்டனாக ரம்யா பாண்டியன் பரிந்துரை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News