50வது படம்.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக களமிறங்கும் பாலிவுட் இயக்குநர்

நடிகர் விஜய் சேதுபதி அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்தின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2023, 09:19 AM IST
  • விஜய் சேதுபதியின் 50வது படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
  • படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் 85 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
  • அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தின் வில்லனாக கமிட்டாகியுள்ளார்.
50வது படம்.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக களமிறங்கும் பாலிவுட் இயக்குநர் title=

மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்போது தனது திறமையால் உயர்ந்து பல ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இவர் வில்லனாகவும் சில படங்களில் நடித்து மிரட்டியுள்ளார். ரசிகர்கள் பலருக்கும் இவரை கதாநாயகனாக பார்ப்பதை விடவும் வில்லனாக பார்ப்பது தான் பிடித்திருக்கிறதாம். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தவர் தற்போது 50 படங்களின் மைல்கல்லை எட்டியுள்ளார்.

2017ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியானது. நித்திலன் சுவாமிநாதன்-விஜய் சேதுபதி இணையும் இந்த புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் இல்லையா? ரஜினியின் அடுத்த படத்தில் புதிய திருப்பம்!

விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படத்தில் நட்டி நட்ராஜ், பாய்ஸ் மணிகண்டன், அருள் தாஸ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் காந்தாரா பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் மற்றும் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதனப்அடி பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தான் "மகாராஜா" படத்தின் வில்லனாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vjs

இதற்கிடையில் நடிகர் விஜய் சேதுபதி அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்தின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விரைவில் தொடங்கும் 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2! ஹீரோ யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News