கோவிட் -19 சோதனை நெகட்டிவ்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர் பற்றி ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த பாடகியின் ஐந்தாவது கோவிட் -19 சோதனை எதிர்மறையாக வந்துள்ளது. இருப்பினும், அவரது அடுத்த சோதனையும் எதிர்மறையாக (Negative) இருக்கும் வரை, அவர் பிஜிஐ மருத்துவமனையில் (PGI Hospital) இருப்பார். முந்தைய நான்கும் சோதனையும் நேர்மறையாக (Positive) இருந்தபோது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவரது நிலை முன்பை விட சிறப்பாக இருக்கிறது என்றும், அடுத்த சோதனை எதிர்மறையாக வரும் என்று எதிர் பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.கே.திமான், "கனிகா கபூரின் உடலில் எந்த அறிகுறியும் இல்லை. அவரது உடல்நிலை கடந்த நாட்களில் இருந்ததை விட நன்றாக உள்ளது" என்று கூறினார். அவர் வழக்கம் போல் உணவை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.
Bollywood singer Kanika Kapoor's fifth #COVID19 test result comes negative. However, she will have to stay at PGI Hospital Lucknow until one more test result comes as negative. (file pic) pic.twitter.com/BEJevytlOj
— ANI (@ANI) April 4, 2020
கனிகா கபூர் ஹோலிக்கு முன்பு லண்டனில் இருந்து மும்பைக்கு திரும்பினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் லக்னோவுக்குச் சென்றார். அவர் ஏற்பாடு செய்த விருந்தில் பலர் பங்கேற்றனர்.
பிறகு அவருக்கு உடல்நிலை மோசமைடந்த போது, அவர் பரிசோதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உரிதியானது. இதற்குப் பிறகு, அவரது தொடர்பில் இருந்தவர்கள் அச்சம் கொண்டானர். கனிகா கபூரின் அலட்சியம் காரணமாக உத்தரபிரதேசத்தில் அவருக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.