Toronto தமிழ் திரைப்பட விழா: விருதை தட்டிச்சென்ற போஸ் வெங்கட்டின் 'கன்னி மாடம்'.!

நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல கதாபதிரத்தில் நடித்துள்ளார்.

Last Updated : Sep 16, 2020, 03:53 PM IST
    1. இந்த திரைப்படம் டொராண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது.
    2. டிகர் போஸ் வெங்கட் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார்.
    3. “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.
Toronto தமிழ் திரைப்பட விழா: விருதை தட்டிச்சென்ற போஸ் வெங்கட்டின் 'கன்னி மாடம்'.! title=

நடிகர் போஸ் வெங்கட் (‪Bose Venkat‬) தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல கதாபதிரத்தில் நடித்துள்ளார். இவர் தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக நடிகர் போஸ் வெங்கட் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த திரைப்படம் டொராண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது "Best Movie People Choice 2020" விருதை தட்டிச்சென்றுள்ளது.  

 

ALSO READ | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ‘ICON OF GOLDEN JUBILEE' விருது!

 

விருதுகளுக்குப் பெற்ற பிறகு பேசிய அவர்., "பல்வேறு படங்களில் ஒரு நடிகராக எனக்கு பாராட்டு கிடைத்தாலும், பிப்ரவரி 21 என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாள். அன்றைய தினம், எனது 'கன்னி மாடம்' வெளியான நாள், ஏனென்றால் அன்று படத்திற்கான வரவேற்பு கிடைத்த மறக்க முடியாது. நான் இன்னும் பல படங்களைத் இயக்கி இருந்தாலும், உங்கள் முதல் படத்திற்கான பாராட்டு எப்போதும் சிறப்பு. "என்றார். 

இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - படங்கள் பட்டியல்!

Trending News