விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 15, 2022, 11:51 AM IST
  • கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
  • இதில் அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு title=

ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் 'கோப்ரா'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகபோகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இதில் அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடத்தப்பட்டது. இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் தனக்கான காட்சிகளை நடித்து முடித்த நிலையில் கிரிக்கெட் வீரரும், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் பதான் அவருக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

மேலும் படிக்க | விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

irfan​c

இந்த நிலையில் கோப்ரா படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த மூன்று ஆண்டு காலத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோப்ரா படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

முன்னதாக விக்ரம் முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த 'மகான்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News