COVID-19: அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2020, 05:09 PM IST
COVID-19: அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித் title=

சென்னை: கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒரு கட்டத்தில் மெதுவாக பரவிய வைரஸ், கடந்த 15 நாட்களாக மிக வேகமாக இந்தியா முழுவதும் பாதித்து வருகிறது. இதனையை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 

மேலும் நாட்டில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த அனைவரும் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து மத்திய மாநில அரசுகளுக்கு பல தரப்பில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

சாதரண மக்கள் தொடங்கி டாடா, ரிலையன்ஸ் என பெரிய தொழில் அதிபர்கள் நிவாரண உதவி அளித்தனர் அதில் பல திரையுலக பிரபலங்களும் லட்சம் முதல் கோடி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்தனர். 

இந்த நிலையில் தமிழக திரை உலகில் இருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது நடிகர் அஜித், 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதில் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுத்துள்ளார். மேலும் ரூபாய் 25 லட்சம் பெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூபாய் 2.5 லட்சம் பி.ஆர்.ஓ யூனியன் நலனுக்காகவும் அவர் நிதி உதவி செய்துள்ளார்.

Trending News