சென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வரவும்! தீபிகா அன்பு கட்டளை

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்ட பதிவு  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Updated: Jan 27, 2020, 03:22 PM IST
சென்னையிலிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வரவும்! தீபிகா அன்பு கட்டளை

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்ட பதிவு  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை தட்டிச் சென்ற நிகழ்வை  83 என்று இயக்குனர் கபீர் கான் படமாக எடுக்கிறார். 

இந்த படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்தாக தமிழக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.  

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த பிரபலங்கள், இயக்குனர் கபீர் கான், கபில்தேவ், ஸ்ரீகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்டார். அப்போது அந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த தீபிகா படுகோன், சென்னையிலிருந்து எனக்கு ஒரு கிலோ மைசூர் பாகு, ஹாட் சிப்ஸில் 2 1/2 கிலோ காரமான சிப்ஸ் வாங்கிட்டு வரவேண்டும், இல்லையென்றால் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

 

itj36gng

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.