தனுஷின் அடுத்த படமும் OTT ரிலீஸ்?

தனுஷின் அடுத்த படமும் OTTயில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - ZEE Bureau | Last Updated : Oct 25, 2021, 04:13 PM IST
தனுஷின் அடுத்த படமும் OTT ரிலீஸ்?

நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் தனுஷ்.  2002-ம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார்.2011-ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை தட்டிச் சென்றார்.

ALSO READ இதுவரை தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்கள்!

2013-ம் ஆண்டு 'ராஞ்சனா' என்ற ஹிந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார்இவரது 25 வது திரைப்படமாக 2015-ம் ஆண்டு 'வேலையில்லா பட்டதாரி' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.  2015-ம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2016-ம் ஆண்டு 'கொடி' என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார்.  இவர் 40-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவைற்றை வென்றுள்ளார்.  இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush

கொரோனா பெரும்தொற்றால் திரையரங்கள் மூடப்பட்டன.  அதனால் பல படங்கள் OTTயில் வெளியாகின. அந்த வரிசையில் தியேட்டர் உரிமையாளர்களை மீறி சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன்,பொன்மகள் வந்தாள், பென்குயின், ஓ மனப்பெண்ணே, வாழ் போன்ற பல படங்கள் OTTயில் ரிலீஸ் ஆகின.  சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படமும் ஓடிடியில் ரிலீஸானது. ஆனால் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய விரும்பிய நிலையில் OTTயில் ரிலீசானது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாறன்' படமும் பொங்கல் பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' என்கிற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  மேலும் தனுஷ் நடித்த ஹிந்தி படமான 'அட்ராங்கி ரே' என்ற படமும், ஆங்கிலப் படமான 'தி கிரே மேன்' என்ற படமும் விரைவில் வெளியாக உள்ளன. 

ALSO READ வேஷ்டி சட்டையில் விருது பெற்ற தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News