தனுஷ்-ன் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தனுஷ்-ன் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு! 

Last Updated : Aug 11, 2018, 04:41 PM IST
தனுஷ்-ன் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தனுஷ்-ன் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு! 

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 படம் உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமிருப்பதாக அறிவித்த படக்குழுவினர் இன்று படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது. மீண்டும் மாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நான் விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது என்று தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பதிவில், மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது தான் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

More Stories

Trending News