நடிகை ஷெர்லி தாஸை இயக்குனர் வேலு பிரபாகரன் மணந்தார்!

Last Updated : Jun 3, 2017, 02:29 PM IST
நடிகை ஷெர்லி தாஸை இயக்குனர் வேலு பிரபாகரன் மணந்தார்! title=

வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லின் தாஸை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

முப்பது படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய, 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று வெளியானது. 

இந்நிலையில் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லின் தாஸை இன்று காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம்செய்துகொண்டார்.

வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில், ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News