விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா?

விஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 04:15 PM IST
  • விஜயின் மாஸ்டர் திரைப்படம் குறித்த புது அப்டேட்
  • தணிக்கையில் மாஸ்டரின் நிலவரம் என்ன?
  • மாஸ்டர் பொங்கல் ரிலீஸா?
விஜயின் மாஸ்டர் படம் குறித்து புதிய அப்டேட் என்ன தெரியுமா? title=

சென்னை: விஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மாஸ்டர் திரைப்படம், படக் குழுவினருக்காக திரையிடப்பட்டது. திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும், திருப்தியாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் (Master) திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிப் போய், தற்போது பொங்கல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

 

மாஸ்டர் படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டுவிட்டது என்பதும் இந்த படத்தின் புது அப்டேட். அடுத்தது என்ன? திரைப்பட ரிலீஸ் தானே என்று அனைவரும் உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றனர்.

Also Read | Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால்...

தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ம் தேதி வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அது திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியது. மாஸான மாஸ்டர் டீசரில் விஜய் சேதுபதியை, விஜய் (Vijay) எதிர்கொள்ளும் அதிரடி காட்சி இடம் பெற்றிருந்தது.

பொங்கல் பண்டிகையன்று தங்கள் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெள்ளித் திரையில் கண்டு ரசிக்க அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News