Adipurush படத்தில் லக்ஷ்மனாக நடிப்பவர் யார் தெரியுமா?

சூப்பர் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படத்தில் லக்ஷ்மனாக நடிக்க இருப்பவர் யார் என்ற மிகவும் எதிர்பார்த்த செய்தி விரைவில் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 02:22 PM IST
Adipurush படத்தில் லக்ஷ்மனாக நடிப்பவர் யார் தெரியுமா?

சூப்பர் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படத்தில் லக்ஷ்மனாக நடிக்க இருப்பவர் யார் என்ற மிகவும் எதிர்பார்த்த செய்தி விரைவில் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

2022 ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடித்த ஆதிபுருஷில் நடிகர் சன்னி சிங் லக்ஷ்மன் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும்.
பிரபாஸ் மற்றும் சைஃப் அலிகான் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.   2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும். பிரபாஸ் (Prabhas) கடவுள் ராமர் கதாபாத்திரத்திலும்,   சைஃப் அலிகான் (Saif Ali Khan),  இலங்கை வேந்தன் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஆதிபுருஷில், அஜய் தேவ்கன் சிவபெருமானாக நடிப்பார் என்ற ஊகங்களும், வதந்திகளாக நிலவுகின்றன. 

Read Also | Adipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா?

அஜய் தேவ்கன், சைஃப் அலி கான் இணைந்து கலக்கிய இந்தி திரைப்படம் தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் (Tanhaji: The Unsung Warrior), பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக சாதனையை பதிவு செய்தது. இந்த திரைப்படத்தை இயக்கியவரும், தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் ஓம் ரவுத் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது, இந்த மெகா பட்ஜெட் திரைப்படம் தொடர்பாக  டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான தகவல்களின்படி, ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமரின் தம்பியாக லக்ஷ்மணன் வேடத்தில் ’சோனு கே திட்டு கி ஸ்வீட்டி’ (Sonu Ke Titu ki Sweety) திரைப்பட்த்தில் நடித்து பிரபலமான நடிகர் சன்னி சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த செய்தி உண்மையானால், இது சன்னி சிங்கின் தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். ரசிகர்கள் அவரை வித்தியாசமான தோற்றத்தில் பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பை காட்டுகிறது இந்த செய்தி. indian box office என்ற டிவிட்டர் கணக்கும் இந்த செய்தியை வெளியிட்டுயுள்ளது.

தயாரிப்பாளருக்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, "'ஆதிபுருஷ்' படத்திற்காக பிரபாஸின் சகோதரர் லக்ஷ்மணனாக நடிக்க சன்னி சிங்கிடம் (Sunny Singh)  கேட்கப்பட்டுள்ளது.  லட்சுமணன் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். பிரபாஸுடன் நடிப்பது சன்னிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்." 
இரு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஆதிபுருஷ் தொடர்பான எந்தவொரு செய்தியும் ரசிகர்களுக்கு சுவராசியத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
முன்னதாக, சீதா கதாபாத்திரத்திற்காக அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty), அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma), கியாரா அத்வானி (Kiara Advani), கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) என பல பிரபல நடிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் ஜாக்பாட் அடித்தது என்னவோ கிருதி சனோன் என்ற பாலிவுட் நடிகைக்குத் தான்.

Also Read | Adipurush: பிரபாஸ்-சைஃப் அலி கானின் மெகா பட்ஜெட் திரைப்படம் எப்போது வெளியாகும் தெரியுமா?

"இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பல நடிகைகளை பரிசீலித்த பிறகு, கிருதியின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களில் பணிபுரிந்து சர்வதேச புகழ்பெற்ற வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஓம் மற்றும் பூஷண்,  இந்த திரைப்படத்தில் பணியாற்றுவார்கள். சீதா கதபாத்திரத்தில் நடிப்பது கிருதிக்கு ஒரு அரிய அற்புதமான வாய்ப்பு" என்று தங்களுக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரம் கூறியதாக Mumbai Mirror கூறுகிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News