'கெணத்த காணோம்' புகழ் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நெல்லை சிவா காலமானார். அவருக்கு வயது 69.

Written by - ZEE Bureau | Last Updated : May 11, 2021, 08:50 PM IST
  • பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்.
  • திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
  • கண்ணும் கண்ணும் படத்தின் 'கெணத்த காணோம்' காமெடி மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.
'கெணத்த காணோம்' புகழ் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும், சின்னத்திரை பிரபலமுமான நெல்லை சிவா காலமானார். அவருக்கு வயது 69.

கண்ணும் கண்ணும் படத்தின் 'கெணத்த காணோம்' காமெடி மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அந்த காமெடி காட்சி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 

நெல்லை சிவா தெருநெல்வேலி மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தார். 1985 முதல் அவர் தொடர்ந்து கலைத் துறையில் ஈடுபட்டிருந்தார். 
 
1985-ல் ஆண்பாவம் திரைப்படம் மூலம் சினிமாவில் (Tamil Cinema) அறிமுகமான நெல்லை சிவா, வெற்றிக் கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம், நேர்முகம், ஜித்தன் 2, பதிலடி, ஆரம்பமே அட்டகாசம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நெல்லை தமிழில் பேசி இவர் செய்யும் காமெடிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் இவர் வல்லவர். நடிகர் வடிவேலுவுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையிலும் (Television) இவரை மக்கள் பல வேடங்களில் பல பரிமாணங்களில் கண்டுள்ளனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சின்னத்திரை தொடரிலும் அவர் நடித்து வந்தார். இதில் அவருடைய கதாப்பாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது.

கொரோனா தொற்று (Coronavirus) ஊரடங்கு காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு பல பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

ALSO READ:பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

ALSO READ: 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News