இயக்குநர் சிகரம் K பாலச்சந்தர் மனைவி உடல்நல குறைவால் மரணம்!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்!

Last Updated : Nov 26, 2018, 08:59 AM IST
இயக்குநர் சிகரம் K பாலச்சந்தர் மனைவி உடல்நல குறைவால் மரணம்! title=

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்!

தமிழ் சினிமா துறையில் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படுபவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர். 

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இவர் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மனைவி ராஜம் (84), வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று விடியற்காலை 4.30 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 

கே.பாலச்சந்தர் - ராஜம் தம்பதியருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News