புதுடெல்லி: தளபதி விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம் 'சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் செழிக்க உதவும்’ என்று தனுஷ் நம்புகிறார். அதை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகிறது.
இந்த செய்தி, தளபதி விஜய் (Thalapathy Vijay) ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து திரைப்பட ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. ஏனெனில் இது கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புக்கு பிறகு (post COVID-19 pandemic) திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய தமிழ் படமாக இருக்கும்.
தனுஷ் (Dhanush) சமீபத்தில் ஆனந்த் எல் ராயின் ’Atrangi Re’ படப்பிடிப்பை முடித்தார், இதில் அக்ஷய் குமார் (Akshay Kumar) மற்றும் சாரா அலிகான் (Sara Ali Khan) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Also Read | 'Master' திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்
மக்கள் மீண்டும் திரை அரங்குகளில் வந்து சினிமா பார்க்கும் அனுபவத்தை அனுபவிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று நடிகர் தனுஷ், ‘மாஸ்டர்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Vijay sir’s Master releases on Jan 13th.
It’s great news for cinema lovers and I hope watching movies with friends and family helps to thrive the theatre culture once again. Nothing like a theatre experience. Please take all the safety precautions and watch the film in theatres.— Dhanush (@dhanushkraja) December 30, 2020
"விஜய் சாரின் மாஸ்டர் (Master) ஜனவரி 13 அன்று வெளியாகிறது. இது சினிமாவுக்கு ஒரு நல்ல செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பது சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டரில் நேரடியாக சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு திரையரங்குகலுக்குச் சென்று திரைப்படத்தைப் பாருங்கள்" என்று தனுஷ் டிவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தி திரைப்படம் ’Atrangi Re’. தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது. இதில் சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறார் அட்ராங்கி ரே திரைப்பட இயக்குனர் ஆனந்த் எல் ராய்.
Also Read | தளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபோது, முடங்கிக் கிடக்காமல், திரைப்படம் (Movie) தொடர்பாக திட்டமிட எனக்கு நிறைய நேரம் கிடைத்தது" என்று இந்த கொரோனா ஏற்படுத்திய இடைவெளியை அவர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியதியாதாக ஆனந்த் கூறுகிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR