மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்: நடிகை ஹன்சிகா

ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.  இந்த நேரத்தை  ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 30, 2023, 04:08 PM IST
  • திக்கும் தமிழில் தித்திப்பாக பேசிய ஹன்சிகா.
  • கல்யாணத்துக்கு பின்னாடியும் சினிமாவில் கவனம்.
மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்: நடிகை ஹன்சிகா title=

ஹன்சிகா மோட்வானி இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.  பிறகு நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா இன்று முதல் நடிக்க முடிவு செய்தார். இதற்காக மும்பையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நடிகை ஹான்சிகாவை ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக வரவேற்றனர். மாலை அணிவித்தும் ரோஜாப் பூ தந்தும் வரவேற்றனர்.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரின் ‘முத்துவை’ வீழ்த்திய RRR; ஜப்பானில் சாதனை வசூல்!

இது அதுல்ல...! கத்திரினாவை பின்பற்றினாரா ஹன்சிகா? - நச் கல்யாண கிளிக்ஸ்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஹன்சிகா மோட்வானி,   

தாய் வீட்டிற்கு மகள் வரும் போது எப்படி இருக்குமோ அதுப்போல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. மேலும் இந்த ஆண்டு 7 படங்கள் வர போகிறது. அத்துடன் இந்தாண்டு எனக்கு மிகவும் லக்கியானதாக உள்ளது. தற்போது நான் சென்னையில் ஒரு மாத படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளோன். மேலும் திருமண வாழ்க்கை பற்றி கூறிய அவர், தான் கல்யாண வாழ்க்கை மிகவும் நல்ல இருப்பதாக கூறினார். மேலும் இன்றைய கால சமுதாயமாக உள்ளதால் எல்லாரும் சமம். சினிமா படப்பிடிப்புக்காக வந்து உள்ளேன். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து.. "அயலி" வெப்தொடர் எப்படி உள்ளது? விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News