வெளியானது திரிஷாவின் ராங்கி படத்தின் டீஸர்!- வீடியோ

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Updated: Dec 8, 2019, 01:33 PM IST
வெளியானது திரிஷாவின் ராங்கி படத்தின் டீஸர்!- வீடியோ

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை திரிஷா தற்போது ராங்கி படத்தில் ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ராங்கி படத்தின் டீஸரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.