நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தை பார்க்கலாமா? ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

Hi Nanna Twitter Review: நானி நடித்துள்ள ஹாய் நன்னா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2023, 12:55 PM IST
  • ஹாய் நன்னா படத்தில் நானி ஹீரோவாக நடித்துள்ளார்.
  • நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.
  • இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் இதோ.
நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தை பார்க்கலாமா? ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்! title=

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நானி (Nani), ஹாய் நன்னா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இப்படத்தை சூர்யுவ் என்பவர் இயக்கியிருக்கிறார். இது, நானியின் 30வது படமாகும். ஹாய் நன்னா திரைப்படம், இன்று (டிச., 7) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பினை ஹாய் நன்னா (Hi Nanna Twitter Review) பூர்த்தி செய்துள்ளதா? இங்கே பார்ப்போம். 

“தியேட்டரில் பார்க்க தவறாதீர்கள்!”

ஹாய் நன்னா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், படத்தை பாராட்டி டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படத்தின் இசை, கதை என அனைத்தும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

 “அழ வைத்த படம்..”

ஹாய் நன்னா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், தன்னை இப்படம் மிகவும் அழ வைத்ததாகவும் இயக்குநர் அழகான கதையை கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும், இப்படத்தை பார்க்க மிகவும் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

க்ளாசிக் ஹிட்..!

ஹாய் நன்னா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், க்ளாசிக் ஹிட் என்றும் தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நானி மற்றும் மிருணாள் தாகூரின் நடிப்பை பாராட்டி பேசியிருக்கிறார். 

சுமார்தான்..!

பலரும் ஹாய் நன்னா படத்தை புகழ்ந்து கொண்டிருக்க, ஒரு ரசிகர் படம் சுமாராகத்தான் இருப்பதாகவும் முன் கூட்டியே திரைக்கதையை கணிக்க முடிவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

மேலும், படத்தின் இசை மற்றும் நடிகர்களின் பர்ஃபாமன்ஸ் ஆகியவை கொஞ்சம் காப்பாற்றி கரையேற்றி விடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

நானிக்கு குவியும் பாராட்டுகள்..

ஹாய் நன்னா படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நானிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. படத்தி கதையை பெரிதாக பாராட்டாத ரசிகர்கள் கூட நானியையும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள மிருணாள் தாகூரையும் புகழ்ந்து வருகின்றனர். 

மேலும், நானியுடன் நடித்திருக்கும் குட்டி பெண்ணிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரசிகர் ஒருவர் படம் சுமாராக இருப்பதாகவும், நானியின் மற்றும் குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாமா?

தெலுங்கு திரையுலகில், நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருக்கின்றனர். அப்படி வெகு சிலர்களுள் ஒருவர், நானி. இந்த படத்தையும் அந்த வகையில் நன்றாகவே தேர்ந்தெடுத்து நடித்து தனது சிறப்பான நடிப்பை இவர் இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனவே இப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். 

மேலும் படிக்க | சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு! நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News