நான்கு மொழிகளில் உருவாகும் நானி- மிருணாள் தாகுரின் 'ஹாய் நான்னா'..

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2023, 07:10 PM IST
  • தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
  • நானி நடிக்கும் ஹாய் நன்னா படம்.
  • கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
நான்கு மொழிகளில் உருவாகும் நானி- மிருணாள் தாகுரின் 'ஹாய் நான்னா'.. title=

நானி- மிருணாள் தாகுரின் 'ஹாய் நான்னா' அப்டேட்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. இந்த நிலையில் தற்போது நடிகர் நானி நடிக்கும் 30வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. 

மேலும் படிக்க | Maaveeran First Review: மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி! என்ன சொன்னார் தெரியுமா?

இந்த திரைப்படத்திற்கு நானி30 என்று அழைக்கப்படும். தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி அவ்வாறான ஒரு கதையையே தற்போதும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் புலனாகிறது. 

தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார் என்று அவர்கள் மேலும் கூறினர். 

தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் 'hi பப்பா' என்ற தலைப்பில் உருவாகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரில் நானியின் தோள்களில் அமர்ந்திருக்கும் குழந்தை அவர்களுக்குப் பின்னால் நிற்கும் மிருணாலுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுக்கிறது. பார்ப்போரை கவரும் வகையில் வண்ணமயமாக முதல் பார்வை அமைந்துள்ளது. 

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் 'hi நான்னா' உருவாகிறது. அப்பா-மகள் பாசத்தை திரையில் சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இந்த திரைப்படம் எளிதாக சென்றடையும். 'Hi நான்னா' இவ்வருடம் டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும். 

படக்குழுவினரின் முழு விவரம்: 

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர் 
இயக்கம்: ஷௌர்யுவ் 
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா 
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
சிஓஓ: கோட்டி பருச்சூரி 
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா 
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி 
நிர்வாகத் தயாரிப்பாளர் - சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

மேலும் படிக்க | போர் தொழில் பிரமாண்ட வெற்றி! சரத்குமார் நடித்துள்ள வேறு சில போலீஸ் படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News