ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல நடிகர் திடீர் மரணம்!

ஹிந்தியில் பிரபல நடிகர் ஒருவர், ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவந்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 11, 2022, 03:59 PM IST
  • உயிரிழந்த நடிகர் சூர்யவன்ஷி, உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
  • இவருக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
  • எப்போதும் முழு உடற்தகுதியோடு காணப்படுவார் என கூறப்படுகிறது.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல நடிகர் திடீர் மரணம்!

ஹிந்தி சின்னதிரையில் மிகவும் பிரபலமான நடிகர், சித்தாந்த் சுர்யவன்ஷி. பல்வேறு சின்னதிரை நிகழ்ச்சிகளில் நடித்துள்ள இவர், இன்று உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 46. 

சூர்யவன்ஷிக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த செய்தியை பிரபலங்களுக்கு புகைப்படக்கலைஞராக செயல்படும் விரல் பயானி இந்த துக்கச் செய்தியை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். அவருடனைய பதில்,"நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி முன்னர், ஆனந்த் சூர்யவன்ஷி என அறியப்பட்டவர் குறித்த அதிர்ச்சிக்கரமான செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா

அவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைய இளைஞர்கள் இந்தாண்டு நாம் இழந்துள்ளோம். எப்போதும் உடற்தகுதியுடன் ஆரோக்கியமாக இருக்கும் அவருக்கு எப்படி இது நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அவரை பலமுறை அவர் மனைவியுடன் ஆலிஷாவுடன் பார்த்தபோது, முழு உடற்தகுதியோடுதான் காணப்பட்டார். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என குறிப்பிட்டுள்ளார். சூர்யவன்ஷி, ஆனந்த் என்ற பெயரை சித்தாந்த் என்று சமீபத்தில்தான் மாற்றியிருந்தார். 

அவர் 'சுஃபியானா இஷ்க் மேரா', 'ஜித்தி தில் மானே நா', 'வாரிஸ்', 'சாத் பெரே: சலோனி கா சஃபர்', 'கசௌதி ஜிந்தகி கே' போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். அவர் கடைசியாக ஜீ டிவியில் 'கியூ ரிஷ்டன் மே கட்டி பட்டி' நிகழ்ச்சியில் காணப்பட்டார்.

மேலும் படிக்க | யசோதா படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News