பொதுவாகவே வயது ஏற ஏற, நமது எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு மிகப்பெரிய காரணம். எலும்புகள் வலுவிழந்தால், மூட்டு வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய். இது தாக்கினால் எலும்புகள் மிகவும் பலவீனமடைவதோடு, எலும்புகள் எளிதில் முறியும் அபாயம் அதிகரிக்கும்.
பலவீனமான எலும்புகள் வாழ்க்கை முறையை மோசமாக பாதிக்கும். எனவே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிக அவசியம். நமது எலும்புகள் ஆரோக்கியத்திற்கு (Bone Health) கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. இது தவிர, கால்சியம் நமது உடலின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் எலும்புகளை முன்பை விட இரண்டு மடங்கு வலிமையாக்கும், அதாவது வஜ்ரம் போல் வலுவாக்கும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ராகி என்னும் கேழ்வரகு
ராகி என்னும் கேழ்வரகு சிறுதானியங்களின் ராணி என அழைக்கப்படுகிறது. இப்போது, ராகி உணவுகள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மிகவும்பிரபலமடைந்து வருகிறது. இதற்குக் காரணம் மற்ற தானியங்களை விட ராகியில் அதிக சத்துக்கள் உள்ளது. ராகி கால்சியத்தின் சிறந்த மூலமாகும். அதோடு கேழ்வரகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
நட்ஸ் என்னும் உலர் பழங்கள்
நட்ஸ் என்னும் உலர் பழங்கள் எலும்புகளை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை மூட்டுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஏனெனில் பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளில், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடல் வலி மற்றும் மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றன. எனவே இவற்றை தினமும் உட்கொள்ள வேண்டும்.
எள் அல்லது எள்ளு
வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும் கால்சியம் அதிகம் உள்ளது. 100 கிராம் எள் விதைகளில் 1400 மி.கி கால்சியம் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். தினமும் 2 ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தாலே, கால்சியம் சத்து குறைபாடு என்பதே ஏற்படாது. எலும்புகள் மிகவும் வலுவாக இருக்கும்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை சூப்பராய் குறைக்கும் சுரைக்காய் சாறு.... இப்படி குடித்தால் போதும்
சியா விதைகள்
சியா விதைகளில் கால்சியம் தவிர, நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்பை வலுவாக்கி, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ப்ரோக்கோலி
உடலில் கால்சியம் குறைபாட்டைப் போக்க, ப்ரோக்கோலியை டயட்டில் அடிக்கடி சேர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கால்சியம் நிறைந்துள்ள ப்ரோக்கோலி உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை சிறந்த அளவில் மேம்படுத்தும். இருப்பினும், ப்ரோக்கோலியை உட்கொள்ளும் போது, அளவிற்கு அதிகமாக வேக வைக்காமல் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சமைத்தால் அதன் சத்துக்கள் வீணாகி விடும்.
சிட்ரஸ் பழங்கள்
எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் சத்து மட்டுமல்லாது வைட்டமின் சியும் அவசியம், எனவே, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசி பழம் உள்ள சிட்ரஸ் நிறைந்த பழங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ