ஹிப்ஹாப் ஆதியின் நான் ஒரு ஏலியன்.. வெளியானது புதிய ஆல்பம் சாங்!

நேற்று, இந்த ஆல்பத்தின் தயாரிப்பாளர்கள் ஆல்பத்தின் முதல் சிங்கிள் "நெட்ட தொறந்தா" பாடலை வெளியிட்டனர்.

Last Updated : Aug 7, 2020, 02:43 PM IST
    1. நான் ஓரு ஏலியன் என்ற தலைப்பில் இந்த ஆல்பம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
    2. நேற்று, இந்த ஆல்பத்தின் தயாரிப்பாளர்கள் ஆல்பத்தின் முதல் சிங்கிள் "நெட்ட தொறந்தா" பாடலை வெளியிட்டனர்.
    3. ஹிப்ஹாப் ஆதி தனது சொந்த சுயாதீன ஆல்பத்துடன் திரும்பி உள்ளார்.
ஹிப்ஹாப் ஆதியின் நான் ஒரு ஏலியன்.. வெளியானது புதிய ஆல்பம் சாங்! title=

படங்களில் நடித்து, மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பின்னர், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிப்ஹாப் ஆதி தனது சொந்த சுயாதீன ஆல்பத்துடன் திரும்பி உள்ளார். நான் ஓரு ஏலியன் என்ற தலைப்பில் இந்த ஆல்பம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 

நேற்று, இந்த ஆல்பத்தின் தயாரிப்பாளர்கள் ஆல்பத்தின் முதல் சிங்கிள் "நெட்ட தொறந்தா" பாடலை வெளியிட்டனர். தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர்மறைதன்மையை மையமாகக் கொண்டு, மார்ஸ் கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் பாடுவதைப் போன்ற இப்பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

ALSO READ | சர்வதேச திரைப்பட விழாவில் ‘கைதி’ படம்: மகிழ்ச்சியில் படக்குழு!!

ஹிப்ஹாப் ஆதியின் முதல் ஹிப்ஹாப் பாடல் பாடியது முதல் இன்று வரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் "ட்ரெண்ட் மியூசிக்" நிறுவனம் தற்பொழுது இந்த பாடலையும் மிகப் பெருமையுடன் வெளியிட உள்ளது.

தமிழ் திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்த ஹிப்ஹாப் ஆதி தற்பொழுது தெலுங்கு திரைப்படத் துறையிலும், தனது ஹிப் ஹாப் இசையின் மூலம் பிரபலமாகி வருகிறார். இவ்வாறு அனைவரையும் தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் ஹிப்ஹாப் ஆதி தற்பொழுது "ட்ரெண்ட் மியூசிக்" நிறுவனத்துடன் இணைந்து "நான் ஒரு ஏலியன்" என்ற திரைப்பட சாராத ஆல்பம் பாடலை வெளியிட உள்ளது.

 

 

தொடர்ந்து ரசிக்க வைத்த வரும் ஹிப்ஹாப் ஆதியின் இந்த "நான் ஒரு ஏலியன்" சுதந்திர தின சிறப்பு ஆல்பம் பாடல் ஆகஸ்ட் 15ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

 

ALSO READ | ஏழை மாணவிக்கு ஐ-போன் அனுப்பிய பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு..!

Trending News